பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

கண்டு கொண்ட புலவர், அவன் ஆளும் தொண்டை நாட்டைச் சுற்றிப் பார்த்து, அந்நாட்டு வயல் வளத்தையும், அவ்வளம் பெருகத் துணை புரியும் திரையன் செங்கோல் நலத்தையும் நேரிற் கண்டு கொண்டார். பொன்னும் பொருளும் அளித்துப் புலவர்களைப் புரக்கும் திரையன் பெருமையையும் பாராட்ட வேண்டும். அத்தகைய வள்ளி யோன் ஒருவன், வருவார்க்கு வழங்கத் தன் வாயிலைத் திறந்து வைத்துக் கொண்டு காத்துக் கிடக்கவும், அதை அறிந்து கொள்ள மாட்டாமையால் வறுமையிற் கிடந்து வாடும் புலவர்களுக்கு அவன் இருப்பதை நினைவூட்டி, அவர் களை அவன்பால் போக்கி அவர்களையும் வாழ வைக்க வேண்டும் என்ற பேருள்ளம் கொண்டார். அவ்விரு பெரும் வேட்கைகளின் விளைவால் உருப் பெற்றதே பெரும் பாணாற்றுப்படை. அதனால், திரையன் பெருமை L_im'rஉள்ளளவும் அழியா நிலை பெற்றதும், புலவர்களின் வறுமைத் துயர் வாடியதும் ஒருபுறம் இருக்க, தமிழர்க்குத் தன்னேரில்லா இலக்கியக் கருவூலம் ஒன்றும் கிடைத்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொண்டை நாட்டு நலங்களை, இன்றும் என்றும் நேர் நின்று காணத் துணை

புரியும் ஒரு தொலை நோக்கிக் காலக் கண்ணாடி, தமிழர் களின் அறிவுக் கண்களில் கிடந்து அணி செய்யும் பெறற்கரிய பேறும் வாய்த்துளது. -