பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ஆற்றுப்படை இயல்பு

திரையன் புகழ் பாடவும், தம்போலும் புலவர் பல்லோர்க்கு வாழும் நெறிகாட்டவும் ஒரு சேர விழைந்த புலவர், தாம் திரையனைக் கண்டது, அவன் பொருள் வழங்கியது, ஆகிய நிகழ்ச்சிகளை, அப்புலவர்க்குத் தாமே கூறுவது அத்துணை நயம் பயப்பதாகாது என்று எண்ணி னார் போலும்! அதனால், புலவர் புதுவழி ஒன்றை வகுத்துக் கொண்டார். புலவர் கண்ட அப்புது வழிக்கு ஆன்றோர் இட்டு வழங்கிய பெயரே ஆற்றுப்படை. --

பண்டைத் தமிழகத்தில் பாக்கள் புனைந்து, பாராண்ட காவலரை நாவார வாழ்த்தியதோடு பைந்தமிழ் வளர்க்கும் பெரும் பணியும் புரிந்து வந்த புலவர்களே யல்லாமல், ஆடியும் பாடியும், அரசர்களையும் அவர் தம் குடிமக்களையும் மகிழ்வித்ததோடு ஆடல்பாடல்களாகிய அருங்கலைகளை அழியவிடாமல் பே ணிப்புரக்கும் பெருந் தொண்டும் புரிந்துவந்த பாண்ர் பொருநர் கூத்தர் போலும் இரவலர்களும் வாழ்ந்து வந்தனர். இவர். தம் ஆடல் பாடல் களைக் கண்டும் கேட்டும், மன்னர்களும் மக்களும் மகிழ்ந்து வழங்கும் பொன்னும் பொருளுமல்லது, இவர்களுக்கு வாழத் துணை புரியும் விழுநிதி வேறு கிடையாது. புலவர்களைப் போலவே நாடு பல புகுந்து ஆங்காங்கு ஆட்சி மேற் கொண் டிருக்கும் அரசர்களையும் அரசர் நிகர் செல்வர்களையும் கண்டு பரிசில் பெற்றுத் தம் வறுமையைப் போக்கிக்