பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

கொண்டு தம் வறுமை தீர்ந்ததும், பிறரைப் பற்றிய கவலை யற்று அடங்கி விடாது, தமக்குப் பொருள் அளித்த புரவலனை வறுமையால் வாடும் தம்போல்வார் பிறர்க்கும் அறிமுகம் ஆக்கி, அவர்களை அவன்பால் போக்கும் பெரும் போக்கினராய் வாழும் பெருமை அவர்பாலும் பொருந்தி யிருந்தது. kar

இரவலர்களின் இவ்வியல்பை அறிந்தவர். புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். அதனால் இவ்விர வலருள் இருபத்தொரு நரம்புகளைக் கொண்ட பேரியாழ் இசைக்கவல்ல பெரும்பானர் குடியில் வந்தான் ஒருவனைத் தேர்ந்து அவன் வாய் வழியாகத் திரையனை அவன் சென்று கண்டது போலவும், திரையன் அவனுக்குப் பொருள் வழங் கியது போலவும், அப்பொருவளத்தோடு வீடு நோக்கி வருங் கால், வழியில் வறுமையால் வாடும் தன் இனப் பிறிதொரு பாணன் சுற்றத்தோடு எதிர்பட, அவனுக்குத் திரையனை அறிமுகம் செய்து, அவனை அவன்பால் போக்கியதாகவும், அவ்வாறு போக்கும் வகையால் திரையன் நாட்டுப்புரையில் பெருமைகளை முறையே எடுத்து மொழிந்தது போலவும், ஐந்நூறு வரிகளைக் கொண்ட இப்பாடலைப் பாடி முடித் .தார். அதனால், இது பெரும்பாணாற்றுப்படை எனும்

பெயர் பெறலாயிற்று. -

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக்காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்று பயன் எதிரச் சொன்னடக்கமும்.’’

-தொல் புறத்திணையியல் பாடாண்திணை

2-1 பேரியாழ் பண்பு

தமிழகத்தின் வடவெல்லை. நாடாக விளங்கிய aதாண்ட நாட்டைக் கச்சியைத் தலைநகராகக் கொண்டு