பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் • 19.

காத்து வந்தான் திரையன், அவன்பால் பரிசில் பெற்றுத் தன் ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தான் பெரும்பாணன் ஒருவன். அவ்வாறு வருவோன் இடைவழியில் தன்போலும் பாணன் ஒருவன், பசியால் வருந்தும் பெரிய சுற்றத்தா ரோடு தளர்நடையிட்டு வருவதைக் கண்ணுற்றான். பாணர் குடியில் வந்தவனாதலின் அவன் கண்கள் எதிரே வரும் பாணன் கையில் இருந்த யாழ்மீதே முதற்கண் சென்றன. யாழ் இசைக்கும் குடியில் வந்து, யாழின் இயல் பெல்லாம் அறிந்திருந்தவனாதலின், அவ்வியாழின் பல்வேறு உறுப்புக்களின் அமைதியை நோக்கினான். அதிலும் வரு. வோன் வைத்திருப்பது யாழ்வகையுள் சிறந்ததான பேரி யாழ். ஆகவே, அதன் ஒவ்வோர் உறுப்பையும் தனித் தனியே ஊன்றி நோக்கி, அவற்றின் அமைதியின் அழகை அறிந்து மகிழத் தலைப்பட்டு விட்டான். - -

யாழ் வல்லான் பெருமை, அவன், அவ்வியாழைப் பேணி வைத்திருக்கும் வகையினாலேயே புலனாகும். யாழின் அருமை அறிந்தவன் அப்பெரும்பாணன் அதனால் காட்டு வழியில், யாழிற்குச் சிறுகேடும் நேராவாறு காப்பதில் பெரு விழிப்புடையவனாய் விளங்கினான். யாழ் மரத்தைத் தோலால் ஆன போர்வையால் நன்றாக மூடியிருந்தான். பரிசில் பெற்று வரும் பாணன் கண்களுக்கு முதற்கண் அத் தோற் போர்வையே தென்பட்டது. மேலும் தொலைவில் வந்து கொண்டிருந்த அவன் கருத்தை, அவ்வியாழ் நோக்கி ஈர்த்தது, அப்போர்வையின் கண்ணொளிக் கெடுக்கும் செந்நிறம். அவன் கண்களைக் கூசப்பண்ணி வியப்பிற். குள்ளாக்குமளவு சிவந்து விளங்கிய அச்செந்நிறம், அதைக் கண்ணுற்ற பாணனுக்கு வந்த வழியில் மலர்ந்து கிடந்த பாதிரி மலரை நினைப்பூட்டிற்று. பாதிரிப்பூவைப் பிளந் தால், அதன் உள்ளகம் காட்டும் செந்நிறத்தையொத் திருந்தது, அத்தோற்போர்வைக்கு ஊட்டப்பட்டிருந்த செந்நிறம். - - -