பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

தோலின் செந்நிறத்திற்கு உவமை காணும் முகத்தான் பாதிரிமலரை நினைந்து கொண்ட பாணன் கருத்தில், பாதிரி மலரும் வேனிற்பருவம், வளமான மலர்கள்ை வேனிற் பருவத்தில் மலர்வான் வேண்டி, அப்பருவம்வரும் முன் பாதிரி தன் இலைகளை உதிர்த்து விடுவது, தொடக்கத்தில் இலை களை உதிர்த்துக் கேடு செய்வது போல் தோன்றிப், பின்னர் மணமும் மனம்மகிழும் நிறமும் உன்டய மலர்களை மலர்த்தும் மாண்புமிக்க வேனிலுக்கு வெம்மை ஊட்டும் வெய்யில், அவ்வெய்யிலைக் காலும் ஞாயிறு, வெய்யிலால் வெம்மை ஊட்டிக் கொடுமை புரிவதுபோல், தோன்றினும், உலகோர் வெறுக்கும் இருளைப் போக்கி, விரும்பி வர வேற்கும் ஒளியை அளிக்கும் ஞாயிற்றின் பெருமை, அஞ்ஞாயிறு உலாவரும் வான்வெளி, அவ்வெளியின் பரப்பும் அகலமும், இலைகளை உதிர்ப்பதும் இருளை ஒழிப்பதுமாகிய அழிவுத்தொழில் மேற்கொண்டு கொடுமையுடையதுபோல் தோன்றினும், அத்தொழில்களைத் தொடர்ந்து மலர்களை மலர்த்துவதும், ஒளியைத் தருவதுமாகிய ஆக்கத்தொழில் மேற்கொண்டு நல்லனவே புரியும் தன்னாட்டு இயற்கை களாகிய வேனிலும் ஞாயிறும் போலவே, கொடுங்கோல் கொன்று செங்கோல் வளர்க்கும் திரையன் ஆட்சி நலம். ஆகியவைகளை நினைப்பூட்ட, அந்நினைவலைகள்ால் சிறிது நேரம் அசைவற்றிருந்தான். இத்தனை எண்ணக் கோர்வை கள் எழுதற்குக் காரணமாயிருந்தது தோலின் செந்நிறம்.

தோலின் செந்நிறச் சிறப்பில் சிந்தையைப் பறிகொடுத்த, பாணன் சிறிது நாழிகை சென்றதும், அத்தோலை இணைக்க தோலின் விளிம்புகளில் இட்டிருக்கும் துளைகளை உற்று நோக்கினான். ஒத்த வடிவுடையவாய், ஒரு சேர ஒழுங்காக, நெடுங்க இடப்பட்டிருந்த அத்துளைகள், பாக்கு மரத்தின் விரியாத இளம் பாளையைப் பிளந்து நோக்கியபோது, அதனகத்தே கமுகங்கரு, இடையிடையே சிறுசிறு இடைவெளிகள் மட்டும் இடம்பெற, நெருங்க அடுக்கி,