பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 கோவிந்தனார் - 21

வைத்திருக்கும் காட்சியை நினைவூட்டின. இயற்கையின் விளைவாம் அதுபோலும் இணைப்பைச் செயற்கையால் செய்துகாட்டிய, போர்வை புனைந்தவனின் கைத்திறன் அந்த அளவோடு நின்றுவிடவில்லை. துளை பல இட்டுத் தைக்க்ப்பெற்றிருப்பினும், அத்துளை காண்பவர் கண்களுக்கு அத்துளை எளிதில் புலனாகிவிடா, துளைகளின் ஊடே துழைத்துத் தைத்திருக்கும் வார்கள் புலப்படாதபடி இணைப்புறும் இரு விளிம்புகளையும் உருக்கி ஒன்றாக்கி இணைத்த்ாற்போல், ஊசியிட்டுத் தைத் திருந்தான். இத் - திறமெல்லாம் அமிைய ஆக்கப்பெற்ற அத்தோற் போர்வையின் பெருமையை எண்ணி எண்ணிப் பெருமிதம் உற்றான் அப்பெரும் பாணன். : -

“அகல் இருவிசும்பில் பாய் இருள் பருகிப் பகல் கான்று எழுதரு பல்கதிர்ப் பருதி காய்சினம் திருகிய கடுந்திறல் வேனில் பாசிலை ஒழித்த பராஅரைப் பாதிரி வள் இதழ் மாமலர் வயிற்றிடை வகுத்ததன் உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சைப் r பரியரைக் கமுகின் பாளைஅம் பசும்பூக் கருவு இருந்தன்ன கண்கூடு செறிதுளை உருக்கி அன்ன பொருத்துறு போர்வை’

o ஆகல் இரு விசும்பில்-அகன்ற பெரிய வானத்தில், .. ஆாய் இருள் பருகி - பரந்து கிடக்கும் இருளைப் போக்கி, பகல் கான்று - ஒளியைப் பரப்பியவாறே, எழுதரு - எழுகின்ற; பல்கதிர்ப் பருதி - ஒளிக்கதிர் கள் எண்ணிலாதன உடைய ஞாயிற்றின், காய்சினம் திருகிய - காயும் வெய்யில் கொளுத்துவதால், கடுந் இறல் வேனில் - அழிவாற்றல் மிகுந்த வேனிற் பருவத்தில், பாசிலை ஒழித்த - பசுமை நிறம் வாய்ந்த