பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 23

நோக்கவிரும்பி, முதற்கண் வாய் எனும் உறுப்பின், வனப்பைக் கண்ணுற்றது. யாழ் நரம்புகளை இயக்கிய விடத்து எழும் இசை, தெளிந்த ஒலியுடையதாக வெளிப்

படுவது வாய் எனும் அவ்வுறுப்பின் வழியே யாம். யாழ்

உறுப்புக்களுள் ஓசையை எழுப்புவது நரம்பேயல்லது வாய், எனும் அவ்வுறுப்பன்று. அதனால் உயிர்களின் வாயகத்தே ஒலியெழும்பும் உள்நாக்கு அமைந்திருத்தல்போல், யாழ் உறுப்பாம் வாயகத்தே உள்நாக்கு அமைந்திராது. மேலும் அது, அதற்கு த்தேவையுமில்லை. ஆகவே, இவ்வாய், தொழிற்படாவெறும் வாயே ப்ாம். வாய்போல் அகம் குடைந்து அங்காந்திருக்கும் உருவொப்புமை கண்டு வாயெனப்பட்டதல்லது. தொழில் ஒப்புமையால் அப்பெயர் பெற்றதன்று.

அவ்வாயின் குடைந்து குவிந்த அகத்தை நோக்கிய புலவர்க்கு. ஆங்கு இடங்கொண்டிருந்த இருட்செறிவு, வரும்

வழியில், நீர்வேட்கை மிகுந்தபோது நெடிது அலைந்து

கண்ட சுனைகள் எல்லாம் நீர் இன்றிக்கிடந்தமையால், நிழல் தோற்றுவிக்காது இருண்டு காட்டிய காட்சியைக் காட்டுவ தாயிற்று. சுனையைக் கண்ணுற்றதும் நீர் நிறைந்து வழியும் எனும் நினைவினராய் நோக்குவார், ஆங்கு நீர் இல்லாமல் இருள் நிறைந்திருக்கக்கண்டு ஏமாந்து நெடுமூச்செறிவது போல், வாய் எனும் பெயருடையதாதலின், ஒலி எழுப்பும் உள்நாக்கு இதன்கத்தும் அமைந்திருக்கும் எனும்

அறிவினராய் அதன் அகத்தே நோக்குவார், ஆங்கு அதைக்

காணாமை மட்டும் அன்று, மாறாக இருள் செறிந்த வெற்றிடத்தையே காண்பர். வாய் எனும் உறுப்பின் வனப்பு இத்தகைத்து. -

வாய் எனும் அவ்வுறுப்பை அடுத்து. பாணன் கண்கள் கடை எனும் உறுப்பில் சென்று நின்றன. ஏற்றியும் இறக்கியும் யாழ் நரம்புகளின் அமைப்பைச் சீர்செய்யப்

பயன்படுவது அவ்வுறுப்பு. நரம்பினை ஏற்றவேண்டின்,