பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 25.

வரிசையினின்றும் வெளிப்படும் காண்பவர் கண்ணொளி கெடுக்கும் கருநீல நிறத்தையே, தண்டின் கருநிறமும் காட்டிக்க வினுாட்டித் திகழ்ந்தது. ** -

யாழ்த்தண்டின் ஒளி கண்டு உளம் களித்த பாணன் இறுதியாக, யாழ் உறுப்புக்களில் சிறந்தனவும், தலையா பினவுமாகிய நரம்புகளின் அமைப்பின்னக் கண்ணுற்றான் நரம்பு ஒரிடத்தே மெலிந்து, ஒரிடத்தே தடித்து ஒழுங்கற்று இருக்குமாயின், அந்நரம்பிலிருந்து எழும் இசையும் ஒழுங் கற்றுப் போய்விடுமாதலின் அந்நரம்புகள் ஒத்தபுரிகளை உடையவாயிருத்தல் மிக மிக இன்றியமையாததாகும். இக் கருத்தோடு, அந்நரம்புகளின் அமைப்பில் ஆராய்ச்சியைப் போக்கிய பாணன் அவை, உருக்கி நீட்டிய பொன் கம்பிகள் போல் புரியடங்கியும் கொடிமுறுக்கற்றும் ஆக்கப் பெற்றிருப் பதைக் காணவே, இவ்வாறு குற்றமற்ற உறுப்புக்களையே கொண்டு குறைவற அமைந்து, கேட்கக் கேட்க இனிக்கும் கேள்விச் செல்வமாம் ஏழிசை வெள்ளத்தை இனிமையுற எழுப்பும் அப்பேரியாழின் பண்பு நலம் பலவும் கண்டு பேரின்பமும் பெருமிதமும் கொண்டாள். .

  • சுளை வறந்தன்ன இருள்து ங்கு வறுவாய் பிறை பிறந்தன்ன பின் ஏந்துகவைக்கடை நெடும்ப ணைத் திரள்தோள் மடங்தை முன்கைக் குறுந்தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின் மணிவார்ந்த தன்ன மர இரு மருப்பின் பொன்வார்ந்தன்ன புரி அடங்கு காம்பின் தொடை.அமை கேள்வி.”

(10-16) .

(சுனைவறந்தன்ன-சுனைவற்றி உள் @5: தோன்றுவது போன்ற, இருள்துங்கு-இருள்செறிந்த வறுவாய்-உள்நாக்கு இல்லாத வாயினையும், பிறை