பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

பிறந்தன்ன-பிறந்த மூன்றாம் பிறையை ஏந்தியிருப்பது போன்ற, பின் ஏந்து-பின்னால் ஏந்தி இருக்கின்ற, கவைடை - இரண்டாகக்கவைத்த கடையினையும் நெடும்பனைத் திரள் தோள் மடந்தை-பருத்த மூங்கில் போல் திரண்ட தோன் அமைப்பினையுடைய மகளிருடைய, முன்கைக் குறுந்தொடி ஏய்க்கும்-முன் கையில் கிடக்கும் குறுவளைகளை யொக்கும், மெலிந்து விங்குதிவவின்-நெகிழவேண்டிய விடத்தில் நெகிழ்ந்தும் இறுக வேண்டிய விடத்தில் இறுகியும் ஏழிசை எழுதற் குத் துணை புரியும் வார்க்கட்டினையும், மணிவார்ந் தன்ன-நீலமணிகளை வரிசைப்படுத்தி வைத்தாற். போன்ற, மாஇரு மருப்பின்-கரியநிறம் காட்டும் பெரிய தண்டினையும் உடைய, பொன்வார்ந்தன்னபொன்னை உருக்கி நீட்டினாற்போன்ற, புரி அடங்கு நரம்பின்-முறுக்கு அடங்கிய நரம்புகளின், தொடை அமை கேள்வி-கட்டு அமைந்த கேள்விச் செல்வமாம் ஏழிசை எழுப்பும் பேரியாழை.) . . . . . . .

2-2 பாணன் பண்பு

பேரியாழின் பண்புநலம் கண்டு வியந்து நின்ற பாணன் உறுப்புநலம் எல்லாம் ஒருசேரஅமையப்பெற்ற இத்துணைச் சிறந்த இப்பேரியாழிற்கு உரிமையுடையவன் எத்துணைச் சிறந்தனாதல் வேண்டும், இதன் அருமை பெருமையறிந்து பேணிக் காக்கவல்ல பெருமையாரிடத்து மட்டுமல்லவோ இது இருக்கற்பாலது?’ என்பன போலும் எண்ணங்கள் எழவே, அதைத் தொடர்ந்து, இத்தகு பேரியாழிற்குரிய அப் பெரும் பாணன் யாவன்? யாது அவன் இயல்பு? என்பன காணும் ஆர்வம் உத்த, அவன் கண்கள், யாழை விட்டு: யாழிற்கு உரியானைக் காணத் துடித்தன. -

. அதுகாறும் அக்கண்கள் யாழின்மீதே சென்றிருந் + தமையால், பெரும் பாணன் உடல் உறுப்புக்களுள், யாழ்