பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் - - - 27

ஏந்தி நிற்கும் இடக்கையே முதற்கண் புலப்பட்டது. யாழை,

மார்பின் இடப்புறத்தில், அஃதாவது, அகத்தில் உடலின் உயிர்நிலையாகிய இரத்தப்பை கொலுவீற்றிற்கும் இடத் திற்கு நேராகக் கொண்டு, இடக்கையால் தன் அன்பெலாம் கவர்ந்து கொண்டாரை ஆரத் தழுவி நிற்பது போல் அணைத்துக் கொண்டிருந்தான். யாழ் மீட்டற்கு ஏற்ற நிலை அதுவாகவே, அவ்வாறு ஏந்தியிருந்தான் என்று கொள்ளலாம் என்றாலும், அது, அப்பேரியாழ்போல் அவன் கொண்டிருக்கும் அளவிறந்த பற்றையும் பாசத்தையுமே புலப்படுத்தி நிற்பதாக, அந்நிலை கண்டு, அப்பெரும் பாணன்டால் அவன் கொண்ட மதிப்பு அளவிறந்து பெருகி விட்டது. ஆகவே, அவன் நலத்தின்பால் ஆர்வமும் மிகுந்து விட்டது. - - -

பெரும்பாணன் உடலைப் பார்க்கின்றான். உரம் ஊட்டும் உணவு பெறாது உருக்குலைந்து போயிருந்தது அவ். வுடல். எலும்பும் தோலுமாய்க் காட்சி அளித்த அவ்வுடல் தனக்கு இயல்பாக இருந்த அழகையும் இழந்து காட்சி அளித்தது. வறுமைக் கொடுமை, அவ்வுடலையும், அவ்வுடல் தாங்கி நிற்கும் உள்ளத்தையும் அந்தளவு துன்புறுத்தி விட்டது. . . . - . . . .

பேரியாழ்இயல்புணர்ந்து பண் இசைக்குமளவு பண்பட்ட உள்ளம் உடையான் ஒருவன், தன் வாழ்க்கையில் உளவாம் செல்வ நிறைவு கண்டு செம்மாந்து போவதோ, அதன் தேய்வு கண்டு துயர்வுற்றுத் துடித்துப்போவதோ, செய்யான் ஆகவ்ே இவன் மேனியின் வனப்பினை மாற்றுமளவு வாட்டு வது, இவன். வறுமைத் துயர்மட்டுமாதல் இயலாது, அதற்கு வேறு சிலவும் காரணமாதல் வேண்டும். பண்புமிகு உள்ளம் வாய்க்கப் பெற்ற பாணனின் மேனியையும் வாட்டி வருத்தும் அது யாதாதல் கூடும் என்று எண்ணி யிருக்கும் நிலையில், அவன் காதுகளில், பலர்கூடி ஒலமிடும் அழுகையொலி வந்து