பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் - - . . . 29

பயனற்றது. அத்தகு கடலால் சூழப்பட்டிருப்பதால் இவ் வுலகம் என் ஒருவனை மட்டுமோ அலைய விட்டுளது? தாங்கித் தளர்ச்சி நீக்குவாரைப் பெறாமல் யானும் என் சுற்றமும் மட்டுமோ அலைகிறோம்? இல்லை; வறுமையால் வருந்தும் எம்மைக் கொடு வெய்யிலால் கொளுத்தி மேலும் வருத்துகிறதே இதோ இந்த ஞாயிறு இதுவும் அலைகிறது. இதன் சுற்றமும் அலைகின்றன; திங்களும் அலைகிறது: அதன் சுற்றமும் அலைகிறது. யானும் என் சுற்றமும் பகலில் மட்டுமே அலைகிறோம். இரவில் எங்கே னும் ஒய்வு கொள்கிறோம்; ஆனால் இவையோ என்றால், ஒய்வு ஒழிவு இன்றி, இரவு பகல் இருபோதுமல்லவோ அலை கின்றன! என்னே இவ்வுலகின் கொடுமை! பலர் நின்று போற்ற பெருமித நிலையில் வீற்றிருக்கத் தக்க விழுக்குடிப் பிறப்பும், பழிப்பில் கல்வியும் பெற்றிருந்தும், வாழ்விழந்து வருந்துவாரைத் தாங்கிப் புரக்கவல்ல தண்ணனி அற்ற இவ் வல்கும் ஓர் உலகா? இதில் இருந்து வாழ்வதைக் காட்டிலும். இறந்து மறைந்து போவதே மாண்புடைத்து. ஆனால் அந்தோ! அவ்விறப்பு தானும் எம்மை எட்டிப் பாரேன் என் கிறதே என் செய்வோம்?’ என்று கூறாமல் கூறி ஏங்கி இரங்குகிறது அவன் இனிய உள்ளம். அவ்வுள்ளத் துடிப்பைப் பாணன் முகக் குறிப்புப் பறைசாற்றி நின்றதாக உணர்ந்து கொண்ட பரிசிலொடு மீள்பவன், அவன் உள்ளம் உணர்ந்து உரைக்கத் தலைப்பட்டான். - . . . .

பாணன் துயர்போக்கத் துணிந்தவன், பாணன் வாய் உற்றகுடியையும் கற்ற கல்வியையும் பழிக்க, அவன் உள்ளம் இவ்வுலகையை வெறுத்து ஒதுக்குகிறது என்றாலும், அவன் உள்ளத்தில் அடித்தளத்தில், இத்தகைய உலகிலும் தளர்ந் தாரைத் தாங்கும் தண்ணளிமிக்கார் சிலர் எங்கேனும் இருத்தல் வேண்டும்; நம் கண்ணிற்கும் கருத்திற்கும் எட்டா திருக்கும் அவரை அணுகிவிட்டால் நம்துயரெல்லாம் தீர்ந்து விடும் என்ற் நம்பிக்கை வேரூன்றியுள்ளது என்பது உண்மை."