பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

மழை மறந்துவிட்டமையால்; புகைவேய் குன்றத்துநிலத்திலிருந்து வெளிப்படும் நீராவி படர்ந்த ம்லை நாட்டகத்தில்; பழுமரம் தேடும் பறவுை போல; கல்லென் சுற்றமொடு-பசி மிகுதியால் அழுது புலம்பும் சுற்றத்தாரோடு; கால்கிளர்ந்து திரிதரும்ஒரிடத்தும் அடங்கியிராமல் கால்கடுக்க அலைந்து திரியும்; புல்லென் யாக்கை-வறுமையால் நலிந்து வனப்பிழந்து போன உடலையும்; புலவுவாய்-வறுமை தீர்ந்து வாழ்வளிக்கமாட்டாக் கல்வியே எனக் கற்ற . கல்வியை பழிக்கும் வாயையும் உடைய, பாணபாணர் தலைவனே!) -