பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திரையன் அளிக்கும்

பரிசிற் பெருமை

“பாண! உன்னை வாட்டும் வறுமையைக் காட்டிலும் நனிமிகக் கொடிது எம்மை வாட்டிய வறுமை. எங்கள் குடி யோடு பிறந்த பெருமையுடையது எம்மைப் பற்றி வருந்திய பசிநோய். எம்குடி என்று தோன்றிற்றோ அன்றே தோன்றிய பழம்பெரும் சிறப்புவாய்ந்தது எம் பசி. ஆனால் அத்துணைப் பழமை வாய்ந்த அப்பசி இன்று எம்மைப் பொறுத்தமட்டில் பழமையுடையதாகிவிட்டது. இன்று.அது எம்பால் இல்லை. ஒரு காலத்தில் இருந்தது என்று பழமை பாராட்டத்தக்கதாகி எம்மைவிட்டு என்றோ அகன்று. விட்டது. அதுமட்டுமன்று. இத்துணை நெடுங்காலம் பசி’ டிால் வருந்தி, இன்று வளமார் வாழ்வு பெற்றவன் யான்’ ஒருவன் மட்டும் அன்று. என் சுற்றத்தின் நிலையும் அன்னதே. என் சுற்றமோ என்றால் உன் சுற்றத்தைக் காட்டிலும் மிக மிகப் பெரிது. அவ்வளவு பேரும் பசியர்ல் வருந்தியவர்தாம். இன்று அத்தனை பேருக்குமே வாழ்வும் வளமும் வந்து விட்டன. வளம் என்றால் எத்துணை வளம் என்று எண்ணுகின்றனை. வயிற்றுப் பசி மாற்றும் வளம் என்று எண்ணிவிடாதே. யாம் இப்பேர்து பெற்றிருக்கும் வளத்தால் எம்பசி மட்டுமே பறந்து போய் விட்டது என்று எண்ணற்க, எதிர்ப்படுவார் எவர் பசியையும், அவர்தாம் எண்ணால் எத்துணையராயினும் அன்னார் அனைவர் பசியை

  • * > . “ ‘ “. . ~ * * .  : : “ . . ... . . . . . . . . . . * * யும் ஒழித்துவிட்டு, அது செய்து விட்டதால். தன்னளவில்”

பெரு-3