பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

சிறிதளவு தானும் குறையுற்றுப் போகர்ப் பெருவளவாழ்வு, யாம் இப்போது பெற்றிருக்கும் வாழ்வு பாண! அத்துணை ஏற்றம் எம்வாழ்வில் இடம்பெற்றது ஒருவன் அளித்த கொடைவளத்தால். என்ன? தொல்லூழி காலமாக அல்லல் மிகு வாழ்வு கண்டவர், இன்று பிறர்க்குத் தாம் வழங்க வழங்க வற்றாப் பெருவளவாழ்வு பெறுவதாவது? அத்தகு பெரு வாழ்வு ஒருவன் அளித்த கொடைவளத்தால் உளவாவ தாவது?’ என்று எண்ணி எண்ணி வியக்கிறது உன் உள்ளம் இல்லையா. பாண இதோ பார். பல்லாண்டு காலமாகப் பனித்துளி அல்லது மழைத்துளி காணாக் கொடுமையால் கருகித் தீய்ந்து போகும் காடு, பெருமழையொன்று பெய்து விட்டதும், புத்துயிர் பெற்றுத் தான் பொலிவு பெறுவதோடு மலர் என்றும். மலர் நிறை மது வென்றும், காய் என்றும், கனி என்றும் எண்ணித் தொலையாப் பொருள்களை அனைத் துயிர்க்கும் வழங்கி வான்புகழ் பெறும் காட்சியைக் கண்ட இல்லையோ? கோடைபோல் கொடுமை புரிந்தது வறுமை; அதனால் காடுபோல் கொடுமையுற்றோம் யாம். மழை போல் வந்து ஒருவன் வழங்க, வாழ்வு பெற்று வனப்புற்றோம் இன்று. பெற்ற பெரும் பொருள் எம் தோள்கள் சுமக்கலா காப் பெரும் பொருளாகவே, அவற்றைச் சுமந்து கொண்டு வந்து உதவ வல்ல வெள்ளைக் குதிரைகளைக் கொள்ளை கொள்ளையாகக் கொண்டு வருகிறோம். அது மட்டுமா? யாம் கொணரும் பொருள் பிறர் கண்டு பொறாமைப்பட்டு கவரக் கருதவல்ல பெரும் பொருளாதலின், இடைவழியில், ஏதேனும் இடையூறு நேருமோ என்ற அச்சத்தால், ஆறலைக் கள்வர் போலும் கொள்ளையரைக் கொன்றுயிர் போக்க வல்ல வயக்களிறுகளையும் வாரிக் கொண்டு வருகிறோம்.

பாண இன்று இத்தகு பெரு வாழும் யான், வறுமை யால் துடிக்கும் உன்னையும் உன் சுற்றத்தையும் கண்டுகலங்கு கின்றேன். எம்வளத்தில் ஒரு சிறிது வழங்கி உம் வறுமை, அயத் தீர்க்கத் துடிக்கிறது எம் உள்ளம். ஆனால் பெரும்