பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் - 35

பாணர் குடிவந்த நீ, உம் பெருமை அறிந்து வழங்கவல்ல வள்ளல் பெருந்தகை விரும்பி வழங்கும் விழுநிதிபெற விரும்பு வையே யல்லது, வயிற்றுப் பசி தீர்க்க என்று, எம்போலும் வழிப்போவார் வழங்குவதைக்கனவிலும் கருதாய் என்பதை அறிவேனாதலின், அளிக்க முன் வந்திலேன். ஆகவே, அதை விடுத்து எம்மை இப்பெரு நிலையில் வைத்துப் போற்றி விடுத்த அப்பெரியோனை உமக்கு அறிவித்து, வருவாரை எதிர் நோக்கி வாரி வழங்க வாயிலைத் திறந்து வைத்துக் கொண்டு வீற்றிருக்கும் அவன் வாழ்விடத்தை அடைய லாகும் வழி வகைகளைக் கூறுகிறேன். கேட்பாயாக.

‘பெருவறம் கூர்ந்த கானம் கல்லெனக்

கருவிவானம் துளிசொரிந்தாங்குப் பழம்பசி கூர்ந்த எம்இரும்பேரொக்கலோடு வழங்கத் தவாஅப் பெருவளன் எய்தி வால் உளைப் புரவியொடு வயக்களிறு

- r முகந்துகொண்டு

யாம் அவண் கின்றும் வருதும்,’ o,

... - (23–28

- (பெருவற்ம் கூர்ந்த கானம் - பெரிய கோடையால் வறட்சி மிக்க காடு. கல்லென - தழைத்துக் கணியீன்று விளங்கும் பறவையும் மிகுந்து கல்லெனும் ஒலியுடைய தாகிக் கவினுறுமாறு. கருவி வானம் துளிசொரிந் தாங்கு - இடி மின்னல்களோடு கூடிய கார்மேகம் மழைநீரைச் சொரிந்தது போல; பழம்பசி கூர்ந்த எம். இரும்பேரொக்கலோடு - தொன்று தொட்டே தொடர்ந்து வரும் பசிநோய்மிக்க.எம் பெரிய சுற்றத்தா ரோடு: யாம் வழங்கத் தவாஅப் பருவளன் எய்தி - யாங்களும், பிறர்க்கு வழங்கினும் வற்றாப் பெரிய செல். வத்தைப் பெற்று! வால் உளைப் புரவியெர்டு - வெண் னிறத் தலையாட்டம் வாய்ந்த குதிரைகளோடு, வயக்