பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 37

யில் இளந்திரையனின் அளப்பரிய ஆற்றல் நின்ைவிற்கு வரவே, அவனோடு தொடர்பு படுத்தும் திருமாலைப்பற்றிக் கூறுங்கால், அவன் ஈரடியால் மூவுலகையும் அளந்து கொண்ட அளப்பறிய ஆற்றலைச் சுட்டிக்காட்டினார். மனைவியைப் பிரிந்தறியாமைக்கு ஏதுவாகிய மாறாக் காதலும் அவள் கண்டு களித்தற்குக் காரணமாம் வடிவழகும் உடையவன் திரையன் ஆகவே, அவன் குடிமுதலாகிய திருமாலைக்கூறுங்கால், திருமகளும் பெருமறுவும் கிடந்து மாண்புதரும் அவன் மார்புநலத்தைப் பாராட்டினார் பின்னர் திருமாலின் மேனிக் கருநீல நிறத்தின் கவின் கண்டுகளித்த பாணன் அந்நிறத்தோடு ஒப்புடைய நிறங் காட்டும் உலகியற்பொருள்களை நினைத்து பார்த்த அளவில், திரையன் குடிவிளங்க உதவிய கடல் திரைகள் கருத்தில் வந்து உறுத்தவே, காயாப்பூப்போலும் பலபொருள் கள் உளவாகவும், கடல்வண்ண அடலேறு எனக் கடல்நீரின் கருநீல நிறத்தையே உவமையாக எடுத்துக் கூறினான். w -

திரையன் திருமால் வழிவந்தவன் என்று கூறிய பாணன் அக்குடிப்பெருமை நம்மனோரால் காணக்கூடாதது ஆகவே, இன்றைய உலகத்தவர் காணலாம் பெருமையும் அவன் குடிக்கு உளது என்பதைக் காட்டுதல் வேண்டும் என்று விரும்பினான். மேலும் திரையன்குடி, திரைவழித்தொடர் போடு தமிழ்நிலத்தொடர்பும் பொருந்தியது ஆதலின் கடல்வாணிகம்.கருதிக் கலம் ஊர்ந்து வருவாரோடு காவிரிப் பூம்பட்டினத்திற்கு வந்திருந்த நாகநாட்டரசன் மகன்

பீலிவளையைக் காதலித்துக் கடிமணம் கொண்டு களித்திருக்குங்கால், ஒருநாள் அவள் திடுமென மறைந்து விட்டாளாக, அவளைக் காணானாய்ச் சோணாட்டு

அரசிளங்குமரன் கலங்கியிருப்புழி, தன்னுரர்க்குச் சென்று விட்டாள் உன் காதலி, இனி அவள் வழித்தோன்றும் உன் மகன் வருவனேயல்லது அவள் வாராள் என்ற செய்தியைச் சிலர் கூறக்கேட்டு மகன் வரவினை எதிர்நோக்கி மன்னன்