பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை -

இருக்க, நாக நாடடைந்த அந்நங்கை நல்லாள் ஆங்கு பிறந்த தன் மகனுக்கு, அரசனுக்கு அடையாளம் காட்டுவான் வேண்டி ஆதொண்டைக்கொடி அணிவித்து, காவிரிப்பூம்பட்டினம் செல்லும் கம்பளிச் செட்டிவழிக் கலம் ஏற்றி அனுப்பினாளாக, இடைவழியில் கலம் கவிழ, கலத்தில் வந்தாருள் கனரசேர்ந்தார் சிலர், காவலன் மகன் ஊர்ந்து வந்த கலத்திற்கு நேர்ந்தது கூற, அது கேட்ட மன்னவன். தாங்கொணாத்துயர் உற்று, அதனால், ஆண்டுதோறும் * நிகழ்த்தும் தலைநகர்த் திருவிழாவைத் தான் மறக்க, அது

க்ாரணத்தால் தலைநகரைக் கடல்கொள்ள தலைநகர் இழந்து அலைந்து கொண்டிருக்க, காவிப்பூம்பட்டிணத்தில் கரைசேர்ந்தார் சிலரைப் ப்ோலவே, மன்னர் மகனும் தமிழ் மண்ணில் அடியிட்டு அரசெய்தி ஆளத்தொடங்கி, அவ்வழியால் தோன்றிய திரைய்ர் குடிவந்த தொல்பெரும் குடிப்பெருமையுடையவன் திரையன் எனத் திரைவழிவந்து தமிழ்க்குடி மூன்றனுள் நடுவண் வைத்து மதிக்கத் தக்க சோழர் குடியோடு தொடர்புகொண்ட குடிப்பெருமையைப் பாராட்டினான். -

திரையன். சோழர் குடியோடு தொடர்புடையவன் என்று கூறக் கேட்ட பெரும்பாணன் உள்ளத்தில், பரந்த இப்பெருநிலத்தை ஆள்வோர் சோழர் குடிவந்தார் மட்டு மல்லரே. சேரர் குடிவந்தாரும் ஆட்சி புரிகின்றனர். புாண்டியர் குடிவந்தாரும் ஆட்சி புரிகின்றனர். ஆட்சி’ புரிகின்றனர் என்றால் வெறும் பெயரளவிற்கு ஆட்சி புரிபவ. ரல்லர். நிலவுலகத்து. மக்களெல்லாம் நின்று. போற்றும் நல்லாட்சி புரிகின்றனர். வெற்றி எட்டுத் திக்கும் ஒலிக்க முழங்கும் போர் முரசும் உடையவர். அவர் குடிபோல் திரையன் குடியும் ஒன்று; அவ்வளவுதானே. இதனால் திரையனுக்கு என ஒரு தனிப் பெருமை இல்லையே என்ற குறைபாடு உருப்பெறுதல் கூடும் என்று எண்ணவே, பெரும் பாண திரையன் முடிகெழுவேந்தர் மூவர்க்கும் உரிய தமிழ்க்