பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா.கோவிந்தனார் 41

இயல்பு, அவ்வழியிடைப் பெறலாம் துணைகள் அவ்வழி களைக் கடந்து செல்லலாம் வகை ஆகியவற்றை விளங்க உரைக்கின்றேன்’ என்று கேட்டு, அவன் அளிக்கும் விடையை எதிர் நோக்கி நின்றான். -

“நீயிரும் -

இருகிலம் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் பிறங்கடை, அந்நீர்த் திரைதரு மரபின் உரவோன் உம்பல், மலர்தலை உலகத்து மன்உயிர் காக்கும் முரசு முழங்கு தானை மூவருள்ளும் இலங்கு நீர்ப்பரப்பின் வளைமிக் கூறும் வலம்புரி அன்ன வகை நீங்கு சிறப்பின், அல்லது கடிந்த அறம்புரி செங்கோல் பல்வேல் திரையன் படர்குலிர் ஆயின் கேள் அவன் நிலையே, கெடுக கின் அவலம்!’’

- - - - (28–38)

(முந்நீர் வண்ணன் பிறங்கடையும், உரவோன் உம்பலும், சிறப்பினையும் செங்கோலையும், பல்வேலை யும் உடையோனுமாகிய திரையன் என்றும், நீயிரும் திரையன் படர்குவிராயன், கேள் அவன் நிலை, கெடுக அவலம் என்றும் வினை முடிவு செய்க.

நீயிரும்-நீங்களும், இருநிலம் கடந்த-பெரிய நிலத்தைக் காலால் அளந்து கடந்த, திருமறு மார்பின்திருமகளும், ரீவத்ஸ் என்ற மறுவும் பொருந்திய மார்பையும், முந்நீர் வண்ணன்-கடல்நீர் போலும் நீல நிறத்தையும் உடைய திருமாலின், பிறங்கடை-வழி வந்தவனும், அந்நீர்திரை தரு மரபின் உரவோன்அக்கடல் நீரின் அலைகளால் கரைசேர்க்கப் பெற்ற இயல்பினை உடைய உரவோனின், உம்பல் திரையர்