பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பேரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

- ரும்ட் }}}} -

மரபில் வந்தவனும், மலர்தலை உலகத்து-பரந்து அகன்ற இப்பேருலகில், மன் உயிர்காக்கும்-நிலை பெற்ற உயிர்களைக் காத்து நிற்கும், முரசு முழங்கு தானை-வெற்றி முரசு முழங்கும் பெரிய நாற்படை யினையுடைய, மூவருள்ளும்-சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களைக் காட்டிலும், இலங்கு நீர் பரப்பின் வளை கூறும் வலம்புரி அன்ன-விளங்குகின்ற நீர்ப்பரப்பாகிய கடலில் தோன்றும் வளைகளுள் மேல்ாகச் சிறப்பித்துக் கூறப்பெறும் வலம்புரிச் சங்கை போல், வசைநீங்கு சிறப்பின்-குற்றம் தீர்ந்த சிறப்பின்ை பும், அல்லது கடிந்த-அறம் அல்லாதனவற்றைக் கடிந்து நீக்கிய, அறம்புரி செங்கோல்-அறத்தை விரும்பும் செங்கோல் ஆட்சியையும், பல்வேல்-பல்வகை வேற். படையினையும் உடையவனும் ஆகிய, திரையன்திரையன்பால், படர்குவிராயின் - செல்லுவீராயின், கேள் அவன் நிலையே-அவ்ன் இயல்பைக் கேட்பாயாகச் நின் அவலம் கெடுக-கேட்டதும் நின் மனக்கவலை கெட்டொழிவதாக! - o “ . . . . . -

3-2 அவன் கடியுடை வியன்புலம்

இளந்திரையன் எல்லா வகையிலும் சிறந்தவன் தான் என்றாலும், பேரியாழ் இசைக்கும் பெருமை மிகு குடியில் வந்த பெரும்பாணன் உள்ளத்தில், தன்னால் பாடிப் பாராட்டத் தக்கவன்தான் இளந்திரையன் என்ற எண்ணம் இவன் உள்ளத்தில் எளிதில் உண்டாகாதே; அது உண்டாகித், திரையன்பால் செல்லும் வேட்கை உண்டாகிவிடுமாயின் தன்று. ஆனால், அது உண்டாக வேண்டும் என்ற ஏக்க மிகுதியால், ‘செல்குவையாயின்’ என்று தான்கூற, திரை யன் தலைநகர் சேணெடும் தொலைவில் உள்ளது போலும்; செல்லும் வழி இடர் மிகுந்தது ப்ோலும், செல்வார் உணவும் உறையுளும் காணாது, இட்ைவழியில் இடருற்றுக் கெடுவர்.