பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 45

கோடை இடிமுழக்கினும், அது கொடுமை செய்யாது, அரவும்

வருவார்க்கு வழிவிட்டு விலகிச் செல்லும்; காட்டுக் கொடிய

விலங்குகளும், கண்ணுக்குத் தோன்றாது கரந்து வாழும். ஆகவே, காட்டுவழி அல்லவோ என்ற கவலை கொள்ளாது

வழியிடையே, வழிநடை வருத்தம் மிகும் போதெல்லாம்.

ஆங்காங்கே, அச்சம் இன்றி இருந்து இளைப்பாறி இளைப்

பாறிச் செல்வாயாக; மேலும், செல்லும் வழியில் கண்ணை யும்,கருத்தையும்கவர்ந்து களிப்பூட்டும் இயற்கை நலக் காட்சி கள் எங்கும் நிறைந்து கிடக்கும். அவற்றால் ஈர்ப்புண்ட

உள்ளம்ஆண்டே இருந்து அவ்வியற்கை இன்பத்தில் தோய்ந்து விட லாகாதா என ஏங்கவும் செய்யும். அத்தகையஇடங்களில்

எல்லாம் இருந்து இருந்து செல்வாயாக. மேலும் இடைவழி யில் உன்னையும் உன் சுற்றத்தாரையும் காணும் வழி

யிடையூர் வாழ்மக்கள் உங்கள்பால் அன்பு கொண்டு

உங்களைத் தங்கள் விருந்தினராக ஏற்றுப் போற்ற முனைவர். அவ்வாறு உங்களை விரும்புவார் மனைதோறும் தங்கித் தங்கி

இன் புற்றுச் செல்வாயாக. ஆகவே எதை எதையோ எண்ணிச்

செயலற்று நின்றுவிடாது, உள்ளம் ஊக்கம் கொண்டு

சிறகடித்துப் பறக்க, காஞ்சி நோக்கிப் புறப்படுவாயாக’ என, இடைவழி இயற்கையால் ஆகும் ஏதம் அற்றது மட்டு

மல்லாமல், இருந்து மகிழ்த்தக்க இனிய இடங்களையும்

உடையது எனக் கூறி, பெரும்பாணன் உள்ளத்தில், திரையன்.

ப்ால் செல்லும் எண்ண்ம் துளிர்விடச் செய்து விட்டான்.

அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக் - கைப்பொருள் வெளவும் களவேர் வாழ்க்கைக் கொடியோர் இன்று, அவன் கடியுடை வியன்புலம்; உருமும் உறாது; அரவும் தப்பாது; காட்டுமாவும் உறுகண் செய்யா, வேட்டாங்கு. அசைவுழி அசைஇ, நசைவுழித் தங்கிச் சென்மோ, இரவல! சிறக்க கின் உள்ளம்! .