பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை .

(அவன் வியன்புலம்-திரையனுடைய பரந்து அகன்ற நாட்டில்; அத்தம் செல்வோர் - வழிப்போவாரை அலறத்தாக்கி - அலற அலறத் தாக்கி, கைப்பொருள் வெளவும் - அவர் கையில் கொண்டு செல்லும் பொருளைக் கொள்ளையடிக்கும்; களவு ஏர் வாழ்க்கைகளவுத் தொழிலையே, தொழிலாகக் கொண்டு உயிர் வாழும் வாழ்க்கையுடைய கொடியோர் இன்றுகொடிய ஆறலை கள்வர் இல்லை; உருமும் உரறாது - இடியேறும் இடித்துத் துன்புறுத்தாது, அரவும் தப்பாபாம்புகளும் தீங்கு செய்யா, காட்டு மாவும், உறுகண் செய்யா - காட்டு கொடுவிலங்குகளும் கொடுமை செய்யா ஆகவே வேட்டாங்கு-நீ விரும்பியபடியெல் லாம்; அசைவுழி அசைஇ - தளர்ந்த விடத்தே இளைப் பாறி, நகைவுழித் தங்கி-நீ விரும்பும் இடங்களிலும், உன்னை விரும்பும் இடங்களிலும்தங்கி; இரவல்;-இரவ லன்ே, சென்மோ - செல்வாயாக; நின்உள்ளம் சிறக்கஉன் உள்ளமும் சிறந்து உனக்குத் துணை நிற்குமாக