பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 &: - 4. போக்கும் வரவும்

மிக்க காட்டு வழி

4-1 உமணர் உப்பு வண்டிகள்

திரையன் ஆட்சிக்கு உட்பட்ட தொண்டை நாடு, காவல் மிக்கது. அதனால் க்ொடியோர் அற்றது எனச் சுருக்கமாகச் சொல்லியதால், பெரும்பாணன் உள்ளம் அமைதியுற்றிராது என எண்ணினான் போலும், பரிசில் பெற்று மீள்வோன். அதனால், வழி, காட்டுவழியே ஆயினும், அவ்வழி, எவ்வாறு இடர் அற்றது என்பதை விளக்கமாகக் கூற வேண்டும் என விரும்பினான். - - r * . . : தொண்டை நாட்டுத்தலைநகராம் காஞ்சிக்குச் செல்லும் பெருவழி, காடுகளை ஊடறுத்துச் செல்வதே எனினும், அது வழங்குவாரற்ற கொடுவழி அன்று மாறாக, அவ்வழியில்,

உப்பு வணிகர் முதலாம் பல்வேறு வணிகச்சாத்தின் பல்வேறு வண்டிகள், இரவு பகல் எப்போதும் வரிசை வரிசையாகச் செல்லும் ஆதலாலும், அவ்வண்டிகளில் ஏற்றிச் செல்லும்

வணிகப் பொருள்களுக்கு உரிய கங்கவரிகனைத் தண்டும் , சுங்கச் சாவடிகள் ஆங்காங்கே அமைந்திருக்கும் ஆதலாலும், அச்சுங்கச் சாவடிகள் அரிய காவல் உடையவாக அமைந் திருக்குமாதலாலும், அப்பெரு வழி எப்போதும் ஆரவாரம் மிகுந்ததாகவே இருக்கும் எனக்கூறத் தொடங்கியவன், முதற்கண் அவ்வழியில் செல்லும் உப்பு வணிகர் வண்டிகளின் அமைப்புத் திறனைக் கூறத் தொடங்கினான்.