பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - பெரும்பாணாற்றுப்படை விளக்கவுர்ை

வண்டிச் சக்கரத்து வண்டிகள் கொழு கொழுவென இருக்கும். அவ்வட்டையில் இட்ட துளைகளில் செருகப்பட்ட ஆரக்கால்கள், வட்டைகள் ஆரக்கால்களை விழுங்கி விட்ட னவோ எனக் காண்பவர் வியக்குமளவு திருத்தமுறப் பொருத்தப்பட்டிருக்கும், ஆரக்கால்களின் மறுமுனை, முழு மரத்தில் கடையப்பட்ட குடத்தில் நிறுத்தப்பட்டிருக்கும், உருளி என்றும் அழைக்கப்பெறும் அக்குடம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்க எண்ணியவன், பெரும்பாணன் அறிந்த ஒன்றை உவமைகாட்டி விளக்கினால், எளிதில் விளங்கும் என்பதால், இசைக் கருவிகளுள் ஒன்றாகிய மத்தளம் போல் காட்சி தரும் அக்குடம் என்றான். ... •

வட்டையும், ஆரமும், குடமும் உடைய சக்கரத்தின் அமைதியை எடுத்துக் கூறியவன், வண்டியின்பார், இரண்டு. கணைய மரங்களை இணைத்தால் போன்ற வடிவும் வலிவும் உடையவாகும் என்றான். இத்தகைய உறுப்பு நலம் அமைந்த வண்டியில் அமர்ந்து செல்வார், வெயிலாலும், மழையாலும் கேடுறாது செல்வான் வேண்டி, வண்டியின் மேலே, தாளிப்பனை ஒலையினால் பின்னப்பட்ட பாய் வேய்ந்த கூரையும் அவ்வண்டிக்கு உண்டு, வலிய பெரிய அவ்வண்டிகள் கூரை வேய்ந்து நிற்கும் காட்சி, மழைக் காலத்தில், கருமேகம் சூழ்ந்த மலைகளை நினைவூட்டுவன வாய் இருக்கும். அவ்வண்டிகள், தம்மை ஈர்த்துச் செல்லும் காளைகளின் ஆற்றல் மிகுதியால், தாம் ஊர்ந்து செல்லும் வன்னிலத்தை எளிதே ஊடறுத்துக் கொண்டு விரைந்து செல்லும் என்றான். + . . ; - . . . . . . .

“கொழுஞ்சூட்டு அருந்திய திருந்துகிலை ஆரத்து,

முழவின் அன்ன. முழுமர உருளி, எமூஉப் புணர்ந்தன்ன பருஉக்கை நோன்பார் மாரிக்குன்றம் மழை சுமந்தன்ன. ஆரைவேய்ந்த அறைவாய்ச் சகடம்’

- - (46-59),