பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தன்ார். 49.

(கொழுச்சூட்டு- உருவு திர்ண்ட வட்டையில் துளைகளாலே, அருந்திய - விழுங்கப்பட்ட, திருந்துநிலை - திருத்தமான நிலைகளிலே பொருத்தப் பெற்ற, ஆர்த்து-ஆரக்கால்களைக் கொண்ட, முழுவின் அன்ன - மத்தளம் போன்ற வடிவுடைய, முழுமரஉருளி - முழு மரத்தாலே கடையப்பெற்ற உருளியினையும்; எழுஉம் புணர்ந்தன்ன - கணையமரங் களை இணைத்தாற்போன்ற; பருஉக்கை நோன்பார் - பருத்த் கைகளையுடைய அழுத்தமான பாரையும்; மாரிக்குன்றம் - மழைக்காலத்தில் சிறுமலைகள்; மழை சுமந்தன்ன - மழைமேகத்தைச் சுமந்து தோன்றுவது போல்; ஆரை - தாளிப்பனை ஓலைப் பாய்: வேய்ந்தவேய்ந்த அறைவாய்ச் சகடம் - செல்லும் வழிகளை

அறுத்துச் செல்லும் வண்டி) -


4-2 வண்டி ஒட்டும் பெண்

வண்டிகளின் வடிவுத்திறனைக் கூறியவன், தொடர்ந்து, அவ்வண்டிகளுக்கு உரியவர் அவ்வண்டிகளில் உடைமைகளை ஏற்றிக்கொண்டு ஒட்டிச்செல்லும் காட்சியினை விளக்கத் தொடங்கினான். அவ்வண்டிகளுக்கு உரியவர் உப்பு வணிகராம் உமணர்; அவர்கள், கடல்படு பொருளாம். உப்பை, மருத நிகலத்து உழவர்களுக்கும், முல்லை நிலத்து ஆயர்களுக்கும், குறிஞ்சி நித்துக் குறவர்களுக்கும், பாலை

நிலத்து மறவர்களுக்கும் கொண்டுசென்று விற்கும் தொழில். மேற்கொள்பவர் ஆதலின், அவர்கள் வாணிகம் கருதி ஒருமுறை வீட்டைவிட்டு வெளிவந்தால், மீண்டும் வீடு: போய்ச்சேர ஆண்டுபல ஆதலும் கூடும். அதனால், அவர்கள் எங்குச் செல்லினும், தம் மனைவி மக்களையும் இல்லறம் : நடத்துவதற்கு வேண்டும் இன்றியமையாப் பொருள். களையும் உடன் கொண்டே செல்வர். அவ்வாறு உடன். கொண்டுசெல்லும் பொருள்களுள், வழியில் நின்று பார் பவர் கண்களுக்குத் தொலைவில் வரும்போதே புலப்படுவது பெரு-4 --- -