பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனா: 51

வரிசையாக வரிந்து கட்டப்பட்டிருக்கும், முழுவு என்ற இசைக் கருவின் காட்சியை நினைவூட்டிவிடவே, அம்முழவி னின்றும் வெளிப்படும் ஒசை இன்பம், அவ்வோசைக்கு ஏற்ப ஆடும் ஆடல் மகளிர், அவர்கள் ஏறி ஆட அமைத்த ஆடரங்கு ஆகிய காட்சிகளையும், அவன் மனத்திரையில் கொண்டு வந்து நிறுத்திவிட்டனபோலும்; சிறிது நேரம் தன்னை மறந்துவிட்டான். அவன் மெய்மறந்து நிற்கவே, வண்டி களும் நின்றுவிட்டனபோலும் அதனால் நின்ற காளைகளை அடித்து ஒட்டவேண்டி நேர்ந்தது. மாடுகளை அடித்து ஒட்டிய ஓசை கேட்டுத், தன் உணர்வு வரப்பெற்று நோக்கும் போது, ஊறுகாய் நிறைந்த காடிப்பானை வைத்திருக்கும் இடத்திற்கு அருகில் அமர்ந்திருக்கும் பெண், அக்காளைகளை அடித்து ஒட்டுவதையும், அப்பெண்ணின் ம்டியில் அழகிய குழந்தை சிரித்து விளையாடிக்கொண்டிருப்பதையும் கண்டான். தான் கண்டுவந்த அக்காட்சின்யப் பெரும் பாணனுக்கு விளங்க எடுத்துரைத்தான். “. . . .

‘வேழம் காவலர் குரம்பை ஏய்ப்பக்

கோழிசேக்கும் கூடுடைப் புதவின் - முளை எயிற்று இரும்பிடி முழந்தாள் ஏய்க்கும் துளையரைச் சீறுரல் தூங்கத் தூக்கி , நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த விசிவிங்கு இன்னியம் கடுப்பக் கயிறுபிணித்துக் காடிவைத்த கலன்உடை மூக்கின் மகஉடை மகடூஉப் பகடு புறந்துரப்ப’

(51–58).

(வேழம் காவலர்- தங்கள் புனத்திற்குள் யான்ை புகாவாறு காக்கும் காவலர், குரம்பை ஏய்ப்ப-பரண் மேலே கட்டிய குடிலைப் ஒப்பக் காட்சி தரும்; கோழி சேக்கும் கூடுடைப் புதவின்-கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும், சிறுகுடில் போலும் கூட்டின்