பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 . பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

வாயிலில்; முளையிைற்று இரும்பிடி- மூங்கில் முளை போலும் சிறுதந்தங்களையுடைய கரிய பெண் யானை யின் முழந்தால் ஏய்க்கும்-முழங்காலை ஒக்கும்; துளை அரை சிறுரல்-இடையே துளை பொருந்திய சிறிய உரலை; துரங்கத்துக்கி-ஆடும்படிதொங்கவிட்டு; நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த-நாடகம் ஆடும் மகளிர். ஆடும் அரங்கிலே கொண்டுசென்று முழக்கும்; விசிவிங்கு இன்னியம் கடுப்ப-வரால் விரிந்து கட்டப்பட்ட இனிய முழவுபோல, கயிறு பிணித்து-கயிற்றாலே வரிகட்டி, காடிவைத்தி கலன் உடை மூக்கின்-ஊறுகாய் நிறைந்த மிடா வைத்திருக்கும் மூக்கணை மீதிருந்து மகவுடை மகடூஉ-குழந்தையை மடியிலே கொண்ட உமண் மகள்; பகடு புறம்துரப்ப-எருதுகளை முதுகிலே அடித்து. . . . . . . . -

4-3 ஓடும் வண்டிகளின் ஒழுங்கு

பெண்டிர், வண்டிகள் மீது அமர்ந்து மாடுகளை அடித்துத் துரத்த, ஒடும் வண்டிகளின் ஒழுங்கைக் கூறத்

தோடங்கினான். வண்டிகள் எல்லாம். உப்புப் பொதி, ஏற்றப்பட்ட வண்டிகள். அதன்ால் வண்டியின் பாரமோ, அதிகம், அதே நேரத்தில், வண்டிகள் செல்லும் வழியோ கரடுமுரடான பாதை மேட்டில் ஏறியும், பள்ளத்தில் இறங்கி

யும், பெருமணலை ஊடறுத்துச் செல்ல நேரிடும், மேட்டில், ஏறும் போதும், மணலை ஊடறுத்துச் செல்லும் போதும் மாடுகளுக்குத் துணையாக, வண்டிகளின் பின்புறம் இருந்து r வண்டிகளைத் தள்ளி விடுதலும், வண்டிகள் பள்ளம் நோக்கிப் பாயும் போது, வண்டிகள் விரைந்து உருள, அவ் விரைவிற்கு ஈடு கொடுக்க இயலாமல் மாடுகள் கால் மடங்கி

வீழ்தலும் கூடும் என்பதால், வண்டிகளைப் பின்புறம்

இருந்து ஈர்த்து ஈர்த்து விடுதலும் செய்தல் வேண்டும். மேலும் வண்டியில் பூட்டியுள்ள காளைகள் அனைத்தும்