பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் ss

ஏட்டிலைமிடைந்த-சிறந்த இலைகளை இடை யிடையே இட்டுக்கட்டப்பட்ட படலைக் கண்ணிதழையும் மலரும் கலந்து தொடுக்கப்பட்ட் தலை மாலையையும் ப்ரேர்-சிறந்த அழகினையும், ஏறுழ்த் திணிதோள்-மிக்க வலியினையும், திண்ணெனத் திரண்ட தோளினையும்: முடலையாக்கை-முறுக் குண்ட உடம்பினையும்; முழு வலிமாக்கள்-நிறைந்த உடல்வலியினையும் உடைய ஆடவர்; சிறுதுளைக் கொடுநுகம்-சிறிய துளைகளையுடைய உருண்டு திரண்ட நுகத்தடியில்; நெரிபட் நிரைத்த-எருதுகளை ஒழுங்காகப் பிணித்த நெருங்கயிற்று ஒழுகை-பெரிய கயிற்றினை உடைய வண்டிகளின் வரிசையை மருங்கில் காப்ப-பக்கத்தே இருந்து காத்துச் செல்ல; சில்பத உணவின்-சிறிதே பதமாகப் பயன்படும் உணவாம் உப்பின், கொள்ளை சாற்றி-விலையைக்குரல் எடுத்துக் கூறி பல் எருத்து உமணர்-பல எருதுகளை உடன் கொண்டு செல்லும் உப்பு வணிகர்; பதிபோகு நெடுநெறி - பல ஊர்களைக் கடந்து செல்லும் நெடிய வழியில், எல்லிடை - பகற்போதில் கழியுநர்க்கு - வழிப்போவார்க்கு; ஏமமாக - பாதுகாவலாக.)

4-4 மிளகுப் பொதி ஏற்றிச் செல்லும்

கழுதைச் சாத்து • . . .”

உமணர் உப்பு வண்டியோடு, துணையாகச் செல்லும் முடலையாக்கை முழுவலி மாக்கள், வண்டிகளை ஊறுஇன்றி. ஒட்டிச் செல்லவும், தேவைப்படும் இடங்களில் உப்பு மூட்டை களை ஏற்றவும் இறக்கவுமே பயிற்சி பெற்றவர்; ஆறலைகள் வரால் வரலாகும் இடையூறுகளைப் போக்குவது அவரால் இயலாது. அதனால் அவர் துண்ை நம்பி காட்டுவழி செல்வது கூடாது எனப் பெரும்பாணன் எண்ணி விடுதலும் , கூடும் என்பதால் வணிகக் சாத்துடன், முடலையாக்கை