பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

முழுவலி மாக்கள் மட்டுமே செல்வர் என்பதில்லை. முழுப் பயிற்சி பெற்ற சிறுபடையும் உடன் செல்லும், அப்படை வீரர், ஆறலைகள்வர் எத்தகையவராயினும் அவரை அழித்து ஒழிக்கவல்ல ஆற்றல் வாய்ந்தவர் என்பதையும் எடுத்துக்கூறவேண்டியதாயிற்று. -

கடல் கடந்த நாடுகளின் பொற்காசுகள் தமிழகத்தில் வந்து குவிவதற்குக் காரணமாய் இருப்பனவற்றுள் தலையாயது மிளகு: அரிய விலையுடையது. அதனால் மிளகை, வாணிகம் கருதி, ஓர் ஊரிலிருந்து பிறிதோர் ஊருக்குக் கொண்டு செல்லுங்கால், படைத்துணையோடு செல்லவேண்டியிருந்தது. . அக்கால மிளகு வணிகர், அத்தகைய படைத்துணைக்கு அரசை எதிர்நோக்கி இராது ஒரு சிறுபடையைத் தாமே வைத்துக்கொண்டிருந்தனர். அதை, அக்கால அரசும் அனுமதித்திருந்தது. அத்தகைய வணிகப்படை இல்லாதிருந்திருக்குமாயின், அதிலும், ஆரமும், பொன்னும், மணியும், மிளகும் போலும் மலை நாட்டுப் பொருள்களைவும், முத்தும் பவழமும் போலும் கடல்விளைபொருள்களையும், நாட்டவர் பெற்றிருக்க முடியாது. அப்படைவீரர்களின் துணை இருந்ததினாலேயே அக்கால வணிகர். அப்பொருள்களை ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்கு அச்சமின்றி எடுத்துச் சென்று வாணிகம் புரிந்தனர். அத்தகைய வாணிகம், தங்கு தடையின்றி நடைபெற்றதினாலேயே, அக்கால மக்களுக்கு அப்பொருள் கள் கிடைத்தன. அதனால், கடல்படுபயனையும், மல்ைதரு செல்வத்தையும் நாட்டு மக்கள் நுகர்த்துணை நின்ற பெருமை, அவ்வீரர்களையே சாரும். -

... . . அவ்விரர்கள், குற்றம் தீர்ந்த நல்ல செயல்களையே

மேற்கொள்வர். மேற்கொள்வதன் முன், முட்டின்றி

முடித்தற்காம் வழிமுறைகளை ஆராய்ந்து துணித்த பின்னரே மேற்கொள்வர். எடுத்துக்கொண்ட வினைக்கு