பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா.கோவிந்தனார் 59. -

வரப்பெற்றதும், நிமிர்ந்த காதுகளையுடையவாகிய, அக் கழுதைகள், வரிசை வரிசையாகச் செல்லும் வனப்பினை விளங்க எடுத்துரைத்தார். -

வணிகச் சாத்தோடு சிறுபடையும் செல்வதால், வழியில் - இடையூறு இராது எனக் கூறி முடிக்குமளவில், இடை வழியில், மேலும் ஒரு வழித்துணை இருப்பதும் நினைவிற்கு வரவே, அதையும் உரைக்கத் தொடங்கினர்ர் புலவர். மிளகு, விலையுயர்ந்த் பொருள். அம்மிளகு வாணிகம் புரிவார் பெரும் பொருள் ஈட்டுவர். அவ்வாறு ஈட்டும் செல்வத்தின் ஒரு பகுதியை வரியாகப்பெற அரசுக்கு உரிமை உண்டு. அதனால் அத்தகைய விலையுயர்ந்த வாணிகப் பொருள்கள் மீது வரிதண்டும் சுங்கச் சாவடிகளைப் பெருவழிகளில் அதிலும், பல பெருவழிகள் ஒன்றுகூடும் நாற்சந்தி, முச்சத்திகளில் நிறுவிவைத்திருந்தது அரசு. அத்தகைய சுங்கச் சாவடிகளில் வரியாக வாங்கிய பொற்காசுகள் திரண்டிருக்கும் ஆதலின், அந்நிதியைக் காத்தற்பொருட்டு அரசுப்படையின் ஒரு பிரிவாம் விற்படை ஆங்கு நிலையாக நிறுத்திவைக்கப்படும். சுங்கச் சாவடியும், அதுகாக்கும் விற்படை வீரர் வாழிடமும் இடம்பெற, ஒரு சிறு ஊரே போல் காட்சி அளிக்கும் அத்தகைய இடங்களும், வழிப் போவார்க்குப் பெருந்துணையாகும். ஆகவே, வழியச்சம் * சிறிதும் இல்லை, பெரும்பான!. இனியும் தாமதம் செய்யாது. புறப்படுவாயாக என ஊக்க்ப்படுத்தினார் புலவர்.

மலையவும் கடலவும் மாண்பயம் தருஉம் , ... “ அரும்பொருள் அருத்தும் திருந்துதொடை நோன்தாள் அடிபுதை அரணம் எய்திப், படம்புக்குப் பொருகணை தொலைச்சிய புண்தீர் மார்பின் விரவுவரிக் கச்சின், வெண்கை ஒள்வாள் வரையூர் பாம்பிற் பூண்டுபுடை தூங்கச் சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடைக் கருவில் ஒச்சிய கண்ணகன் எறுழ்த்தோள்