பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y

பத்துப்பாட்டு விளக்கம்-வரிசை எண்-2 என நெடுகல் வாடை விளக்கவுரையை மனையுறை புறாக்கள்’ என்ற தலைப்பில் வெளியிட்ட நாங்கள் இன்று,

பத்துப்பாட்டு விளக்கம் - வரிசை-எண் 3

‘பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை

என்ற இந்த நூலைத் தமிழ்கூறு நல்லுலகத்தின் முன் படைக் கிறோம். *

“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

தம்புகழ் கிறீஇத் தாம் மாய்ந்தனரே” -

‘என்ற புறநானூற்று மொழிகளுக்கேற்ப, புகழுடம்பு பெற்று விட்ட புலவர் பெருந்தகை, இறவாத புகழுடைய இலக்கி யங்கள் பலவற்றைத் தமிழன்னைக்கு அணி செய்ய அளித்து விட்டுச் சென்றுள்ளார். புலலர் அவர்களின் முன்னைய படைப்புகளுக்குத் தமிழகத்துப் பெரியோர்களாகிய தாங்கள் காட்டிய பேரன்பையும், பாராட்டையும், ஆதரவையும் தொடர்ந்து அளித்திட வேண்டுகிறோம்.

“தமிழுக்குக் தொண்டு செய்வார் சாவதில்லை'ா என்றார் பாவேந்தர். தம் வாழ்நாள் முழுவதும், காலம் கரம் பிடித்து அழைத்துப் போன அந்தக் கடைசி நொடி வரை, தமிழ்ப்பணி ஆற்றிய புலவர் அவர்கள் வாழ்வார்: அவர் தமிழ் உலகிற்கு அளித்துச் சென்றுள்ள இலக்கியச் செல்வங்கள் உள்ளவரை என்றென்றும் நிலைத்து வாழ்வார்; தமிழறிந்தோர் நெஞ்சமெல்லாம். நிலைத்து வாழ்வார் என்பது உறுதி! -- . -

-எழிலகம் பதிப்பகத்தார்