பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

கடம்புஅமர் நெடுவேள் அன்ன மீளி உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர் தடவுகிலைப் பலவின் முழுமுதல் கொண்ட சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மரியல் புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து அணர்ச்செவிக் கழுதைச் சாத்தோடு வழங்கும் உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும் வில்லுடை வைப்பின் வியங்காட்டு இயவின்.

(67–82)

(மலையவும் கடலவும் மாண்பயம் தரூஉம் அரும் பொருள்-மலையில் கிடைப்பனவும், கடலில் கிடைப் பனவுமாகிய சிறந்த புயனைத் தரவல்ல பெறுதற்கரிய கரிய பொருள்களாகிய அகில், ஆரம், மிளகு, பொன், மணி, முத்து பவளங்களை அருந்தும்-நாட்டு மக்கள் பெற்று அனுபவிக்கத் துணை புரியும்; திருந்து தொடை, நோன்தாள்-திருந்திய துவக்கத்தையுடையவாக மேற் கொண்ட வினையின்கண் அசைக்க இயலா உறுதி மிக்க முயற்சியினையும்; அடிபுதை அரணம் எய்தி-கால்களை மறைக்கும் செருப்பு அணிந்து படம்புக்கு-சட்டை அணிந்து; பொருகனை தொலைச்சிய புண்நீர் மார்பின் -பகைவர் ள்ய்யும் அம்புகளின் வலியைத் தம் ஆற்ற, லால் அழித்து விடுவதால், அவ்வம்புகள் பாய்ந்து ஆக்கும் புண்ண்னின்றும் விடுபட்ட மார்பினையும்; விரவு வரிக் கச்சின் வெண்கை ஒள்வாள்-மார்பில் விரிந்து கட்டப்பெற்ற கச்சின்கண் வெள்ளிய பிடி அமைந்த கூர்வாள் வரையூர் பாம்பின் பூண்டு புடை தூங்க-மலை மீது ஊர்ந்து செல்லும் மலைப் பாம்பு போல், பூணப்பட்டு, பக்கத்தே தொங்க சுரிகை நுழைந்து-குத்துவால் செருகப்பட்டு: சுற்று வீங்கு ஒச்சிய-பகைவரின் கரிய வலிய வில்லாற்றலை அழித்த கண் அகன் எறுழ்த்தோள்-பரந்து அகன்ற வலிவு மிக்க -