பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. விருந்து ஒம்பும் எயினர்

காஞ்சி வழி கொடுமை அற்றது; காவல் மிக்கது என் பதை உறுதி செய்வதற்காகத், தான் கூறிய விளக்கங் களால், பெரும்பாணனுக்கு வழியச்சம் அற்றிருக்கும். ஆனால், காஞ்சியை ஒரு நாளிலோ, ஒர் இரவிலோ அடைந்து விடுதல் இயலாது. பாலை, முல்லை, குறிஞ்சி; மருதம். நெய்தல் என்ற நிலவகைகளை யெல்லாம் கடந்து சென்றால்தான் காஞ்சியைக் காண இயலும். நாள் பல நடக்க வேண்டியிருக்கும். அத்தனை நாட்களுக்கு வேண்டிய உணவினை உடன்கொண்டு செல்வதும் இயலாது. இரவுக்காலத்தே இருந்து செல்வதற்கு வேண்டிய இடங் களுக்கு என்ன செய்வது! என்ற எண்ண அலைகள் பெரும் பாணனை அலைக்கழிக்கவும் கூடும் என உணர்ந்த காரணத் தால், கடந்து செல்ல வேண்டிய இடைவழியில் குறுக்கிடும். அந்நிலங்களின் இயல்பையும், இந்நிலங்களில் வாழும் மக்க ளின் இயல்புகளையும், அவர்கள், வழிப்போவார் அனைவர் பாலும் பொதுவாகவும். திரையன் அவை நோக்கிச் செல்லும் பாணர் போலும் இரவலர்பால் சிறப்பாகவும் காட்டும் பேரன்பு நிலைகளையும் விரிவாகவும் எடுத்துக் கூறத் தொடங்கி, பெரும்பாணன் முதற்கண் அடியெடுத்து வைக்க யிருக்கும் பாலை நிலத்தவர் பற்றிக் கூறமுற்பட்டார்.

மழை பெறாக் கடும் வறட்சியாலும், ஞாயிற்றின் கொடும் வெப்பத்தாலும் காய்ந்து தீய்ந்து போன குறுங் காடுகள் இடையிடையே இடம்பெறும் பெருமணல் பரப்