பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா.கோவிந்தனார் . 63

பாகிய பாலை நிலக் கொடுமை கண்டு கலங்க வேண்டுவி தில்லை; செல்லும் வழியில், அப்பாலை நிலத்து மக்களாம் எயினர் குடியிருப்புக்களை ஆங்காங்கே காணலாம். உழுது பெறவல்ல நெல் போலும் நன்செய்ப் பொருள்களோ, தினை சாமை போலும் புன்செய்ப் பொருள்களோ ஆங்குக் கிடைப் பது அரிது. அவர்களுக்குக் கிடைப்பதெல்லாம் புல் அரிசி ஒன்றே. அப்புல் அரிசியும் எளிதில் கிடைத்து விடாது. சிறிதே மழை பெய்யுங் காலத்தில் முளைத்து முற்றி உதிரும் புல் அரிசியை, எறும்புகள், தங்களுக்கு ஆண்டு முழுமைக்கும் வேண்டும் குறிக்கோளுடன் ஒவ்வொன்றாக ஈர்த்துச்சென்று, தங்கள் வளைகளுள் சேர்த்து வைத்திருக்கும். அத்தகைய வளைகள் உள்ள இடங்களைத் தேடிக் கண்டு பிடித்து வளை களைத் தோண்டி ஆங்குள்ள புல்லரிசிகளைத் திரட்டிக் கொண்டு வருதல் வேண்டும். எறும்புகள், அரிசியை, வளை களின் ஆழமான பகுதியில் சேர்த்து வைத்திருக்கும் ஆத லாலும், நிலம் வன்னிலம் ஆதலாலும், வளைகளை எளிதில் தோண்டுவது இயலாது. ஒரு பக்கம் அடிக்க அடிக்க, தலை விரியாதிருப்பதற்காகக் கட்டப்பட்ட இரும்புப் பூணும், மறு பக்கம், கரையில் செருகப்பட்ட உளி போலும் வடிவுடைய இரும்புக் கடப்பாரையும் உடையவாக், ஆச்சாஅல்லது கருங் காலி போலும் வயிரம் மிக்க மரத்தால் ஆன, பருத்த தடி கொண்டு, வளைகளைச் சிறிது சிறிதாகக் குத்திக் குத்திக் கிளரி மண்ணை அகற்றி அரிசியைப் பிரித்து எடுக்கவேண்டும். ஒரு வீட்டில் வாழ்வார் அனைவர்க்கும் தேவைப்படும் அவ் வளவு புல்லரிசியையும், ஒரே வளையில் பெற்றுவிட இய ல்ாது. உள்ள எறும்பு வளைகள் அவ்வளவையும் தோண்டி எடுத்தல் வேண்டும். அப்பணி, வீட்டில் உள்ள ஒரு சிலரால் மட்டும் ஆகிவிடாது. வீட்டில் உள்ள அனை. வரும் சென்று தோண்டுதல் வேண்டும். அண்மையில் ஈன்று எடுத்த மகவோடு, மெத்தென்ற மான் தோல் மீது முடங்கிக் கிடப்பது அல்லது எழுந்து நடமாட இயலாதவளாகக் காணப்படும் ஒருத்தி தவிர்த்து ஆண், பெண், இளையோர்,