பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பெரும்பாணாற்றுப்ப்டை விளக்கவுரை

முதியோர் அத்துணை பேரும் சென்று வளை தோண்டினால் தான் ஒரளவு அரிசியையேனும் கொண்டுவர இயலும், ஆக அவர்கள் ஈட்டி வைத்திருக்கும் அப்புல்லரிசி அவ்வளவு அரும் பாடுபட்டுப் பெற்றதாகும். .

சோறுக்கு வேண்டும் புல்லரிசியாவது, அப் பாலை நிலத் திலேயே ஒரு வகையில் சிடைத்து விடும். ஆனால், துணை உணவாகும் காய்கறியைக் காண்பதே இயலாது. வெகு தொலைவில் உள்ள கடற்கரையைச் சேர்ந்த நெய்தல்நிலத்து மீனவர்கள், பச்சை மீனாக விற்றது போக, விலையாகாது விடப்படும் மீனை உப்பிட்டு உலர்த்தி விற்பனைக்காகக் கொண்டு வரும்போது வாங்கி வைக்கும் கருவாடு தவிர்த்து வேறுபொருள் கிடைப்பது அரிது. அக்கருவாடு தானும் நினைத்தபோது கிடைத்துவிடாது. மீனவர்கள் வரும்போது வாங்கி வைத்திருந்தால்தான் உண்டு.

ஆக, எயினர், தங்களுக்கு உணவாகப் பயன்படும் புல் லரிசியையும் கருவாட்டையும் கெடாமல் பேணிக் காப்பதில் விழிப்புடையவர்களாக இருப்பர். மக்கள் உட்கொள்ளும் உணவு வகைகளில் கடைசி தரத்தைச் சேர்ந்தவை இவை. ஆகவே, இவற்றை, அப்பாலை நிலத்து எயினர்களைத் தவிர்த்து வேறு நிலத்து மக்கள் விரும்பமாட்டார்கள். மேலும் எயினர்கள் கொடியவர்கள். மற்றவர் அவர்களைக் காணவும் நடுங்குவர். அதன்ால், அவ்வுணவுப் பொருள் களுக்கு மக்களால் அழிவு நேராது. ஆனால், இவற்றையும் திருடிச் செல்லும் பகைவர் இல்லாமல் போய்விடவில்லை. பாலை நிலத்தில், இவை தவிர்த்து வேறு உணவுப் பொருள் கிடைக்காது என்றால் அந்நிலத்து வாழ் அணில், எலி போலும் உயிர்களுக்கு வேறு என்ன கிடைத்து விடும். அவை பும் இவற்றை நம்பியே உயிர் வாழும். அதனால் அவ்வுணவுப் பொருள்களுக்கு அணில்களாலும், எலிகளாலும் வரும் கேடு மிக மிக அதிகமாம். அதனால், அரும்பாடு பட்டு ஈட்டி