பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 65

வைத்திருக்கும் பொருள்கள் அணில் வாயிலும், எலி வாயிலும் விழுந்து விடாதபடிக் காப்பதில் எயினர் மிகவும் கருத்துடையவராக இருப்பர். - . . .

தம்குடில்களைக் சூழ உள்ள இடங்களில் ஆடி மகிழும் அணில்களைக் காணும் எயினர் உள்ளத்தில், மெத்தென்ற பஞ்சுபோலும் மென்மையான மயிர் - சிலிர்த்துத் தோன்ற, வரிவரியான கோடுகளோடு கூடிய அவற்றின் அழகிய முதுகு, உயர்ந்த அடியினை உடைய இலவ மரத்தின் நீண்ட கிளை களில் காய்த்து, அகத்தே இருக்கும் பஞ்சு புறத்தே தோன்று மளவு முற்றி வெடித்துத் தொங்கும் இலவங் காய்களை நினைவூட்டி மகிழ்ச்சி அளிக்கும் என்றாலும், தங்கள் உணவுப் பொருள்களுக்கு அவ்வணில்களால் ஆபத்து உண்டாகும் என்ற உணர்வு, குடிசைகளுள் அவ்வணில்களையும் நுழையு விடாதபடி பார்த்துக்கொள்வாயாக என நினைவூட்டிவிடு ம்

அதனால், தம் குடியிருப்புக்களை அணிலும், எலியும் நுழையாதவாறு அமைத்துக்கொள்வர். ஈச்ச மரத்தின் மட்டைகள், வேலின் முனைபோலும் கூரிய வலிய முனை வாய்ந்த இலைகளை அடர்த்தியாகக் கொண்டவை. அவ் வீச்ச மட்டைகொண்டு குடில்களின் கூரைகளை அமைத் தால், அணிலோ, எலியோ நுழையாது. அதனால், எயினர் ஈச்ச மரங்களைத் தேடிச் சென்று, வெள்ளம் வடிந்த ஆற்றுப் படுகையில் அறவிட்டிருக்கும் மணல்போல் காட்சிதரும் அடியையுடைய அம்மரத்து மட்டைகளை வெட்டிக்கொண்டு வந்து, குடில்களைத் தொலைவிலிருந்து நோக்குவார்க்கு முள்ளம் பன்றியின் முதுகுபோல் காட்சிதரும் வகையில் தம் வீட்டுக் கூரையை அமைத்து இருப்பர்.

வாழிடம் குடில்களே ஆயினும், பாதுகாப்பு மிக்கது. என்பதாலும், புல்லரிசியும் , கருவாடும் வேண்டுமளவு சேமித்து வைக்கப்பட்டுள்ளன என்பதாலும், அக்குடில் களின் இல்லத்து அரசிகளாம் எயிற்றியர் உள்ளத்தில் எப்

பெரு-5 • -