பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

போதும் மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும். அவ்வக மலர்ச்சி, வெண்பல் வரிசை புலப்பட வாய்நிறைய வெளிப்படும் சிரிப் பால் நன்கு புலப்படும். அவ்வெயிற்றியர் உணவு சமைக்கும் முறையும் பாராட்டத்தக்கதாகும். முதற்கண், புல்லரிசையை மூடிக்கொண்டிருக்கும் உமியையும் ஆடையையும் நீக்க முனைவர். அதற்கு , அதை உரலில் இட்டுக் குற்றுதல் வேண்டும். o - -

பழகிய மானைக் கொண்டு பழகாப் புது மான்களைப் பிடிப்பது ஒரு முறை. அதனால் எயினர் மனை ஒவ்வொன்றி லும், அவ்வாறு பழகிய மான் ஒன்று வளர்க்கப்பட்டு வரும். பார்வை மான் என அழைக்கப்படும் அந்த மானைக் குடலின் முற்றத்தே வள்ர்ந்து நிற்கும் விளா மரத்தில் கயிறுகொண்டு கட்டி வைப்பர். மான் சுற்றிச் சுற்றி வருவதால், மரத்தில் கட்டிய கயிறும் சுற்றிச் சுற்றி வந்து மரத்தின் அப்பகுதியை தேய்த்துவிட்டிருக்கும். இவ்வாறு பார்வை மான் பிணிக்கும் கட்டுத் தறியாகவும் பயன்படும் அவ்விளா மரம், குடில்வாழ் மக்கள் தளர்ச்சி அற்று உழைப்பதற்கு உறுதுணையாக, முற்றத்தில் நிறை நிழலை பரப்பி நிற்கும். அம்மரத்தின் அடியில் புதைக்கப்பட்டிருக்கும் கல்லுரலில் புல்லரியை இட்ட எயிற்றியர், வயிரம் பாய்ந்த குறுகிய உலக்கை கொண்டு பல முறை குற்றி உமியும் ஆடையும் போக்கி எடுத்துக் கொள்வர். பின்னர் சமைப்பதற்கு வேண்டிய தண்ணீர் கொண்டுவரச் செல்வர். நிலம் வன்னிலம், வறட்சி மிக்கது. அதனால், கிணறு ஆழமாகத் தோண்டியிருப்பினும், கல்லூற்றாகவே இருப்பதால் தண்ணீர் சிறிதளவே கிடைக்கும். அதுவும், பருகுவதற்கு இனிய நன்னீராக இராது. உவர் நீராகவே இருக்கும். ஆயினும் அது தவிர்த்து வேறுநீர் கிடைக்காது. அதனால் அந்நீரை மொண்டு வந்து சேர்வர். அடுப்பில் தி மூட்டுவர். கொம்மை முரிந்து கிடக்கும் அவ்வடுப்பில், சோற்றுப் பானையை ஒருவாறு நிறுத்துவர். பானை பழைய பானை, அதனால் வாய் உடைந்திருக்கும். அம்மூளிப்பானை யில் நீர் ஊற்றித் தி மூட்டுவர். நீர் கொதிக்கத் தொடங்சி