பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

மரத்தின், நீழல் முன்றின்-நிழல் படர்ந்தமனைமுற்றத் தில், நில உரல் பெய்து- நிலத்தில் புதைக்கப்பட்டிருக் கும் உரலில் புல்லரிசியை இட்டு, குறும்காழ் உலக்கை ஒச்சி- குறுகிய வயிரம் வாய்ந்த உலக்கையால் குற்றி, நெடுங்கிணற்று- ஆழமான கிணற்றில், வல் ஊற்று. உவரி தோண்டி- சிறிதே ஊறும், உவப்பு நீரை முகந்து கொண்டு, தொல்லை முரவு வாய்க் குழிசி- பழைய வாய் உடைந்து போன மூளிப் பானையை, முரி அடுப்பு, ஏற்றி- கொம்மை முரிந்த அடுப்பில் ஏற்றி, வாராதுஅரித்து எடுக்காமல், அட்ட- ஆக்கிய, வாடு ஊன்உலர்ந்த கருவாட்டுடனே கூடிய, புழுக்கல்- சோற்றை: வாடாத்தும்பை- பொன்னாலான திம்பை சூடிய’ வயவர் பெருமான்- வீரர்களுக்குத் தலைவனாகிய’ ஓடாத்தானை- போரில் புறம்காட்டாத படையினை உடைய, ஒண்தொழில் கழல்கால்-அரிய வேலைப்பாடு அமைந்த வீரக்கழல் விளங்கும் கால்களை உடைய செவ்வரை நாடன்- சிறந்த மலைநாடாளும் திரையனு டைய, சென்னியம் எனினே- பாண்சாதியேம்யாம் என்று கூறுவீராயின், தெய்வ மடையின்- தெய்வங்

களுக்கு இடும் பலிபோல, தேக்கு இலை குவைஇ-தேக்கு இலையில் உணவைக்குவிப்பர் ஆகையினாலே, நும் பை தீர்குடும்பொடு- நும்முடைய பசுமைதீர்ந்த சுற்றத் தாருடன்; பதம் மிகப்பெருகுவீர்- உணவினை மிகவும் பெறுகுவீர்கள்.) -

உண்ணும் கானவர் 1-5

பாலைநிலத்துக் குடிமக்களாம். எயினர்களின் குடியிருப் புக்களில் கிடைக்கும் வரவேற்பு நன்றாகவே இருக்கும் ஆனால், அப்பாலை நிலம் தமக்கே உரியது எனும் உணர் வோடு, அந்நிலத்துக் குறுநில மன்னர்கள் போல், எல்லை களில் குறும்பு என அழைக்கப்படும் சிறுசிறு அரண் அமைத்து