பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 71

வாழும் அந்நிலத்து வீரர்களின் போக்கு எவ்வாறு இருக்’

கும்ோ என எண்ணி, பெரும்பாணன் அஞ்சி விடுதல் கூடாது என்பதால், அத்தன்கய எயினக் குறும்புகளின் இயல்பையும் அவற்றிற்கு உரியராகிய எயினiரர்களின் இயல்பையும், எடுத்துரைக்கத்தொடங்கியவர், முன்னதாக, கடந்து செல்ல வேண்டிய குறுங்காடுகளில், இரவிலும் பகலிலும் உணவிற் காகக் காட்டு விலங்குகளுக்குக் கண்ணிவைப்பதல்லது வேறு கேடு அறியாக்கானவர் வாழ்க்கையை விளக்கினார். -

கலைமானும், காட்டுப்பன்றியும், குறுமுயலும் வாழும் குறுங்காடு அது. பாதை எனச் சொல்லத்தக்க நிலையில் முறையாக அமைந்த பாதை எதுவும் இராது. மேலும் மான்கள் கூட்டம் கூட்டமாய்த் திரிவதால், வழியெங்கும் அம்மான்களின் காலடிகளே தெரிவதல்லது, மக்கள் காலடி யைக் காண்பது இயலாது. அதனால், செல்லும் வழி இது. தானா என்ற மயக்கமும் ஒரோவழி எழக்கூடும். ஆனால், அந்த மயக்கத்தைப் போக்கி, இதுவழிதான் என்பதைக் கூறாமல் கூறும் சில குறியீடுகளும் ஆங்கே உள்ளன. அது பாலை நிலம், ஆங்கு மழைபெய்வது அரிது. அவ்வாறு வானம் வறண்டுபோகும் காலத்தில் ஆங்கு வாழ்வார்; குடிநீர் பெறுவர்ன் வேண்டி வெட்டும் குழிகள், அவ்வழியின் இருமருங்கிலும் நிறைந்து தோன்றும். அதுகொண்டு வழி தெரிந்து செல்வது எளிதாகும், மேலும், இரவில் காட்டுப் பன்றி வேட்டை குறித்தும், பகலில் குறுமுயல் வேட்டை குறித்தும் திரியும் கானவர்களை அவ்வழிகளில், ஆங்காங்கே காணலாம். ஆகவே வழி அச்சமும் தேவையில்லை என்றவர், அவர்களின் வேட்டை முறைகளையும் சிறிதே விளக்கத் தொடங்கிவிட்டார். - - . . . .

பன்றி வேட்டை பற்றிய விளக்கக்தை முதற்கண் எடுத்துக்கொண்டவர்க்குப் பன்றியின் உடல்மைப்ப்ைப் பற்றியும் சிறிது கூற் விருப்பம் எழுந்ததுபோலும். ஆனால்,