பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 73

பன்றிவேட்டை, கானவர் எண்ணியவாறு எப்போதும் வாய்த்துவிடுவதில்லை. இரவெல்லாம் காத்திருந்தாலும் பன்றி வராமலே போய்விடுவதும் உண்டு, பன்றி வந்தாலும், வெட்டிய குழிகளில் வீழ்ந்துவிடாமல் நீர் உண்டு சென்று விடுவதும் உண்டு. குழியில் வீழ்ந்தாலும் கானவரைத் தன்வலிய கொம்புகளால் குத்தித் துன்புறுத்திவிட்டுத் தப்பி விடுவதும் உண்டு. அதனால் பன்றி வேட்டை பயனற்றும் போவதும் நிகழும். அவ்வாறு ஏமாற்றம் க்ர்னும் கானவர், இரவில், பன்றிவேட்டை ஆடுவதைக் கைவிட்டுப், பகலில் முயல்வேட்டை மேற்கொள்வர். முயல் விரைந்து ஒட வல்லது. தப்பி ஓடும் போது உடன் ஒடித் துரத்திப் பிடித்தல் தம்ம்ால் இயலாது என்பதால் வேட்டை நாய் களையும் உடன்கொண்டு செல்வர். வேட்டை வாய்த்ததும் விரைந்து கவ்விக்கொள்ளும் உணர்வோடு எப்பேர்தும் வாய் அங்காந்தே திரியும் நாய்களுடன் செல்லும் கானவர், குறு முயல்கள் அடங்கியிருப்பனவாகவும், வெளிப்படும் முயல்கள் குறுகிய ஒருவழி தவிர்த்து, வேறு பக்கங்களில் தப்பிவிடாத வாறு, நாற்புறமும் வேலிகளால் சூழ்ப்பெற்றனவுமாகிய தூறுகளைத் தேர்ந்து, ஒன்றோடொன்று பிணைத்துப் பின்னப்பட்ட வலையை, அக்குறுகிய வழியில் கட்டிவிட்டு, ஆங்கே சிலர் காத்திருக்க, சிலர் உள்ளே புகுந்து முயல் அடங்கியிருக்கும் தூறுகளைத் தடிகொண்டு தாக்குவர். அத்தாக்குதலுக்கு அஞ்சி வெளிப்படும் முயல், பல திசை களிலும் ஒடியும், அங்கெல்லாம் வேலி நின்றுதடுக்கவே, வேறு விழியின்றி, அச்சிறுவழியாக வெளிப்பட விரையுங்கால், ஆங்கே கட்டப்பட்டிருக்கும் வலையுள் வீழ்ந்துவிட, கானவக் அதை அகப்படுத்திக் கொள்வர். வல்ையுள் அகப்பட்டு, கிடக்கும் முயலை அகக் கண்களால் பார்க்கின்றார். புலவர். முயல் உறுப்புக்களில் எளிதில் புலப்படுவன இரு காதுக்ளே. எப்போதும் நிமிர்ந்தே நிற்கும் அக்காதுகளின் தோற்றம், தாமரை மலரின் புறஇதழ்களை நினைவூட்ட, அத்தாமரை மலரின் அழகிய தோற்றம், அம்மலரைத்