பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை -

கும். அதன் உள்ளே ஒரு பக்கத்தில், வேற்படைகள் வரிசை யாகச் சார்த்திவைக்கப்பட்டிருக்கும். அவற்றை அணுகி னால், புலால் நாறும்; ஊன்றி நோக்கினால், கூரிய முனை மழுங்கியும் வளைந்தும் காணப்படும். இதற்கு ஏன் இந்தக் கதி என்ற வினா எழுப்பினால், ஆங்கு உள்ளார், இவ்வேற் படைகளெல்லாம் அண்மையில் நடந்த ஒரு போரில் ஈடுபட்டு, களத்தில் மடிந்து வீழும் வீரர் உடல்களைத் தின்ப தற்காக வந்து வட்டமிட்ட பருந்துக்கூட்டத்தால் களமே. நிழல்பட்டுப் போய்விட்டது எனக் கூறுமளவு, பகைவர் பல்லாயிரவர் உடலிற்பாய்ந்து உயிர் போக்கியதோடு, எஞ்சியோரை அஞ்சி ஒடச் செய்து களம் வென்ற சிறப்போடு இவண்வந்து சேர்ந்துள்ளன, அதுதான் காரணம் என்றுகூற, அவ்வேற்படையின் வீரம் கண்டு பாராட்டி அப்பால் நகர்ந் தால், ஆங்கு, வலதுகையில் ஏந்தும் வேற்படை பகைவரை அழிக்கும் நேரத்தில், பகைவர்படை தம் மெய்யில் பாய்ந்து விடாவாறு மெய்யை மறைத்துக் கொள்ள, வீரர் இடது கையில் ஏந்தும், பல்கைபோல் படர்ந்த கேடயங்கள் வரிசை வரிசையாகச் சார்த்தி வைக்கப்பட்டிருக்கும். அடுத்துச் சென் றால், போர் என்றதுமே பயன் கொள்ளும் நிலையில் ஏற்றிய நாண் ஏற்றியவாறே உள்ள நெடிய பெரிய விற் படைகள் சார்த்தி வைக்கப்பட்டிருக்கும். அவ்வில் வரிசைக்கு அணித்தாக வகைவகையான அம்புகள், குவியல் குவியல் ‘களாகக் கொட்டிக் கிடக்கும். -

படைக்கலக் கொட்டிலைவிட்டு வெளியே வந்ததும், ஆங்கே, பருத்து உயர்ந்த கால்களை நாட்டிப் போடப்பட் டிருக்கும் பெரிய பந்தலைக் காணலாம். மலையளவு உயரம் உடையனவாகக் காணப்படும் அப்பந்தலின் கால்கள் தோறும், ஒரு காலில் அம்புகள் நிறைந்த அம்பூற்ர்த்துாணி, ஒரு காலில், கேட்ட அளவிலேயே பகைவரை அஞ்சி ஒடுங்கச் செய்துவிடவல்ல கடிய ஓசையை எழுப்பும் துடிப் பறை என மாறி மாறிக்கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும்