பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கrr, கோவிந்தனார் . 77

மிக உயர்ந்த கால்களின் உச்சியில் கட்டப்பட்டுத் தொங்கும் அப்பறாத்துாணி, பெரும்பாணன், அடுத்துப்புக இருக்கும் ம்லைநாட்டில், மலை உச்சிகளில் கட்டப்பட்டிருக்கும் தேன் கூடுகளை நினைவூட்டுவதாய் இருக்கும்.

பந்தலின் வேறு ஒரு புறத்தில், மற்றும் ஒரு மனை காட்சி தரும். அம்மனை வாயிலில் கொடிய வேட்டை நாய்கள் இரும்புச் சங்கிலிகளால் கட்டிவைக்கப்பட்டிருக்கும். அந்நாய்களைக் காண்பார் எவரும், அம்மனையை அணுகு தற்கும் அஞ்சுவர். அம்மட்டோ அத்தகைய நாய்கள் இருந்து காப்பதோடு, மேலும் வலுவான காவலும் ஆங்குப் போடப்பட்டிருக்கும். இவற்றையெல்லாம் நோக்கின், அது, அக்குறும்பின் தலைவன் உறையுளாம் போலும் ` என எண்ணத் தோன்றும். - -

அவ்விடம் விட்டு அகன்றால், இவ்விடங்களையெல்லாம் - உள்ளடக்கிய மிக உயர்ந்த சுற்றுமதில் காட்சிதரும். மதில், மழையாலும், வெய்யிலாலும் பாழ்பட்டுபோகாவாறு, அதன் தலை ஊகம் புல்லால் வேயப்பட்டிருக்கும். மதில் வாயிலை அணுகினால், அவ்வாயில், வலிய பலகைகள் பலவற்றை ஒட்டுச்சேர்த்துச் செய்யப்பட்ட கதவால் மூடப்பட்டிருப் பதும், அக்கதவினை, எளிதில் திறந்துவிட்ாதபடி அடைப் பதற்காக, உருண்டு திரண்ட கணையமரம் பொருத்தியிருப் பதும் புலப்படும். கதவைத் திறந்து கொண்டு வாயிற் புறத்தே வந்தால், ஆங்குப், பகைவர்களைக் குத்திக்கொலை செய்யவல்ல கழுமரங்கள் வரிசையாக நாட்டப்பட்டிருப் பதைக் காணலாம். . - - ..

குறும்பைவிட்டு வெளியே வந்தால், அக்குறும்பைச் சூழப் பகைவர் எளிதில் நுழைந்துவிடாதபடி, தடுத்து நிறுத்தவல்ல பருத்து உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடுபோல் வளர்ந்து நிற்பதைக் காணலாம். காவற்காடாகிய அப்பகுதி