பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பெரும்பானாற்றுப்படை விளக்கவுரை.

அயினின்றும் வெளிப்பட்டு வந்து பார்த்தால், காவற் காட்டைச் சூழ, முள்நிறை மரங்கள் முளைத்து வேலியாக அமைந்திருப்பதைக் காணலாம். எயினக் குறும்பின் அமைப்பு இதுவாகும். -

எயினக் குறும்பின் இயல்புகளை கூறக்கேட்ட பெரும் பாணன் உள்ளத்தில் அச்சம் குடிகொண்டு விட்டதை அறிந்த புலவர், “எயினர் குறும்பு இத்துணைக் காவல் உடையது; கொடுமை மிக்கது என்றாலும், திரையன் புகழ்பாடும் பெரும்பாணராம் நும்போலும் இரவலர்க்கு ‘நுழைவதற்கு எளிமையானது; இ னி ைம தருவது; உங்களைக் கண்டதுமே, கொடிய வில்லேந்தித் திரியும் எயினர்கள், தம் கொடுமையை மறந்து விடுவர்: உங்கள் முன் பணிந்து நிற்பர். உங்களை வரவேற்று அழைத்துச் சென்று, சோறும் கறியும் கொடுத்து உம் பசி போக்கி வழி அனுப்புவர். ஆங்கு அவர் இடும் சோறு, எயினர் குரம் பையில் உண்ணும் புல்லரிசிச் சோறுபோல் இராது. ஈங்கு, படைச்கப்படுவது நெல் அரிசிச் சோறு; அதிலும் மேட்டு நிலத்தில் விளைந்த செந்நெல் அரிசிச் சோறு அச்சோறு எப்படி இருக்கும் தெரியுமா? கடந்து செல்லும் களர் நிலத்தில் வளர்ந்து நிற்கும் ஈச்ச மரத்தின் கொட்டை களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவைபோல் கொட்டை கொட்டையாகச் சிவந்து காட்சி அளிக்கும். படைக்கும் சோறு மட்டுந்தான் சிறப்புடையதாக இருக்கும் என எண்ண வேண்டாம். சோற்றோடு உடன் படைக்கும் கறி, அதை விடச் சிறப்புடையதாகும். கறி, எளிதில் கிடைக்காத உடும்புப் பொறியல். தம்முடைய வேட்டை நாய்களை ஏவிக் கொண்டு வந்த அவ்வுடும்புப் பொரியலைப், படைத்த் சோறு மறைந்து விடுமளவு நிறையப் படைப்பர். அத்தகைய சிறந்த உணவினை, வழியில் காணலாம் ஒவ்வொரு குறும்பிலும் பெறுவீர்கள். ஆகவே, பால்ையை இனிது சுடிந்து செவ்வாயாக’ என்றார்.