பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

வரைப்பின்-உயர்ந்த நிலையையுடைய மதிலையும்: வரைத்தேன் புரையும்- மலையில் கட்டப்பட்டிருக்கும். தேனடையை ஒக்கும்; கவைக்கடை புதையொடுகவர்த்த அடிப்பகுதியையுடைய அம்புக்கட்டுகளுடன்; கடுந்துடிதுங்கும்- கடிய ஓசையை எழுப்பும் துடி எனும் தோல் கருவியும் தொங்கவிடப்பட்டிருக்கும்; கணைக்கால் ப ந் த ல்- பருத்தகால்களையுடைய பந்தலையும்; தொடர்நாய் யாத்து-சங்கிலிகளால் நாயைக் கட்டிவைத்துள்ள துன்னரும் கடிநகர்அணுகுதற்கு அரிய காவல் அமைந்த வீட்டையும்; வாழ்முள் வேலி-முள் உயிரோடு கூடிய. முள் நிறைந்த ம்ரங்களால் ஆன் வேலியினையும், மிளைசூழ் படப்பைகாவற்காடு சூழ்ந்த பக்க இடத்தினையும்; கொடு நுகம் தழிஇய புதலின்-உருண்டு திரண்ட கணைய மரம் பொருத்தப் பெற்ற கதவினையும்; செந்நிலை நெடுநுழி வயக்கழு நிரைத்த வாயில்-சாயாது நிற்கும் நிலையினையும், கூரிய முனையினையும் உடைய வலிய கழுமரங்கள் வரிசையாக நிறுத்தப்பட்ட வாயிலையும் உடைய, கொடுவில் எயினக் குறும்பில் சேப்பின்கொடிய வில்லேந்திய எயினருடைய அரண்களில் சென்று தங்கினால், களர் வளர் ஈந்தின்-களர் நிலத்தில், வளரும் ஈச்ச மரத்தின் காழ் கண்டன்னகொட்டைகளைக் கண்டாற் போன்ற: சுவல்வளர்மேட்டு நிலத்தில் விளைந்த, நெல்லின் செல் அவிழ்ச் சொன்றி-நெல்லின் சிவந்த அரிசியாலாகிய சோற்றை: ஞமலி தந்த-நாய் பற்றிக்கொண்டு வந்த, மளவுசூல். உடும்பின்-அக்குமணி போலும் முட்டைகளையுடைய உடும்பினது; வறை கால்யாத்தது-பொரியலாலே மறைத்த உணவை: வயின் தொறும் பெறுகுவீர்வீடுகள் தோறும் பெறுவீர்கள்.)