பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மறவர் r வாழ்க்கை

பால்ை நிலத்தில் எயினர் குறும்புகளில் செந்நெல் அரிசி சோற்றையும் உடும்புப் பொரியலையும் வயிறுபுடைக்கத் தின்ற மகிழ்ச்சியோடு, மலைநாடாம் குறிஞ்சி நிலத்தில் நுழையும் பெரும்பாணனுக்கு அம்மண்ணின் வீரப்பெரு மையை விளக்கத் தொடங்கினார். -

மகளிர் இயல்பாகவே அஞ்சும் இயல்புடையவர்: வேற்றொலி கேட்பினும் வியர்த்து ஒடுங்கி விடுவர் என்பதும், அஞ்சாமையும் தறுகண்மையும் ஆடவர்க்கே உரியவை: ஆகவே, வீரம் என்றால் அதை ஆடவர்பால் மட்டுமே காண லாம், என்பதும் உலகியல். ஆனால், இது குறிஞ்சி நிலத்த வர்க்கு முழுமையாகப் பொருந்தாது. அந்நிலத்து ஆடவர் எவ்வாறு அட்லேறுபோன்ற ஆற்றல்மிகு மறவர்களாக வளர்க்கப்படுகிறார்க்ளோ, அதற்குச் சிறிதும் குறையாத நிலையிலேயே, அந்நிலத்து மகளிரும் மறக்குடி மகளிராகவே வளர்க்கப்படுவர். மகளிர், கருவுற்றிருக்கும்போது சிறிதளவு அச்ச உணர்ச்சிக்கும் ஆளாகிவிடுதல் கூடாது என்ப. குறிஞ்சி நிலத்து மகளிர், இதற்கும்,அப்பாற்பட்டவராவர். வாழும் நிலம் கொடு விலங்குகள். மண்டிக்கிடக்கும் காடுகள் . செறிந்த மலைநாடு. கோடையில் இடியேறு கூடிய கொடு மழை கொட்டும்.கருவுற்றிருக்கும் நிலையிலும், தினைக்காத் தலும் கிழங்கு அகழ்தலும் ஆகிய பணி மேற்கொள்ளும் அந்நிலத்து மகளிர், தங்க்ளைத் தாக்க வரும் யானைகண்டு

அஞ்சுவதற்கு மாறாக, அதை அச்சுறுத்தி ஒட்டி ம்கிழ்வர்.