பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார். - $3.

எல்லைக் காவற்படைகளை அழித்து, அந்நாட்டு எல்லைக் கண் இருக்கும் அந்நாட்டு ஆனிரைகளைப் பொழுது புலர் வதற்கு முன்பே கவர்ந்து கொண்டு வருவர். ஊர் வந்தடைந் ததும் முதற்பணியாக, அன்றுவரை தங்களுக்குக் கடனுக்குக் கள் வழங்கிய கள் விலையாட்டிக்குக் கள் விலையாக, ஆனிரைகளில் ஒரு சிலவற்றைத் தந்து விடுவர். பின்னர்த் தங்கள் மனைகளில், தாங்கள்ே காய்ச்சி வைத்திருக்கும் கள் வகைகளுள், மிக இனியதாகிய, நெல் இட்டுக் காய்ச்சிய கள்ளை உண்டு மகிழ்வர். பிறகு ஊர் மன்றத்திற்குச் சென்று, ஆங்குத் தம் வெற்றியைக் கொண்டாட கொண்டு வந்த ஆனிரைகளுள், கொழுத்துத்திரியும் கொல் லேற்றை அறுத்து, ஆக்கி, ஊராருடன் ஒருங்கிருந்து உண்டு, மகிழ்வர். அது முடிந்ததும் வீர விளையாட்டு மேற்கொள் வர். கொன்ற கொல்லேற்றின் தோலை, மயிர் சிவாமல் மடித்துப்போர்த்த மத்தளத்தை,ஒருவன் கூட்டத்தின் நடுவே வைத்து அடித்து முழக்க அவ்வொலிக்கு ஏற்ப, வில்லேந்திக் கிடக்கும் இடத் தோள்கள் வலப்புறம் வளையவும், வலத். தோள்கள் இடப்புறம் சாயவும் பகலெல்லாம் ஆடி மகிழ்வர்

- இவ்வாறு, சோம்பல் என்பதைச் சிறிதும் அறியாது விர வாழ்க்கை வாழும். கானவர் குடியிருப்புகள் மிகுந்த மலை நாட்டில், மறவர்களின் வீர விளையாடல்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, காட்டுப் பாதையைக் கடந்து செல்வீர் களாக என்றார்: . . . . . . - .

‘யானை தாக்கினும் அரவு மேல் செலினும் நீல்கிற விசும்பின் வல்ஏறு சிலைப்பினும் சூல் மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை வலி கூட்டு உணவின் வாட்குடி பிறந்த புலிப்போத்து அன்ன புல் அனல் காளை. செக் நாய் அன்ன கருவில் சுற்றமொடு கேளா மன்னர் கடிபுலம்புக்கு நாள் ஆதந்து நறவு நொட்ை தொலைச்சி