பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பெரும்பானாந்றுப்படை 67.! ரை

இல் அடு கள்ளின் தோப்பி பருகி + மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி மடிவாய்த் தண்ணுமை நடுவண் சிலைப்பச் . . . . சிலைநவில் எறுழ்த்தோள் ஒச்சி வலன் வளையூஉப் பகல் மகிழ்து ங்கும் தூங்கா இருக்கை . முரண்தலை கழிந்த பின்றை.

. . . . . . . (134-147)

(யானை தாக்கினும்-யானை தாக்க வந்தாலும்: அரவு மேல் செலினும்-பாம்பு தன்மேல் ஊர்ந்து, சென் றாலும், நீல் நிற விசும்பின்-நீல நிறம் வாய்ந்த மேகத் திடையே தோன்றும்; வல்ஏறு சிலைப்பினும்-கொடிய இடி இடித்தாலும், சூல் ம்கள்-கருவுற்ற மகளும்; மாறா மறம் பூண் வாழ்க்கை-அவற்றிற்கு அஞ்சித் தன் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்ளாத வீரம் செறிந்த வாழ்க்கையினையும்; வலிக்கூட்டு உணவின்தம் ஆற்றலால், பிறர் நாட்டைக் கொள்ளைகொண்டு உண்ணும் வழக்காற்றினையும் உடைய, வாள்குடிப் பிறந்த-வாள் தொழில் வல்ல குடியில் பிறந்த புலிப் போத்து அன்ன-ஆண்புலி போன்ற புல் அணல் காளை-புல்லிய அரும்பு மீசை கொண்ட அக்குடித் தலைவன்; செல் நாய் அன்ன-குறித்த விலங்கின் மீது குறி தவறாது பாயவல்ல நாயை ஒத்த கருவில் சுற்ற மொடு-ஏவிய பணியை இடையூறு இன்றி முடிக்க வல்ல, வலிய விற்படையுடைய வீரர்களுடன், கேளா மன்னர் கடிபுலம் புக்கு-தன் ஆணைகேளாத பகை அரசருடைய காவல்மிக்க இடத்தே சென்று நாள் ஆ. தந்து-விடியற்காலத்தில் அவர்கள் ஆனிரைகளைக் கவர்ந்து வத்து, நறவு நொடை தொலைச்சி-அவற்றை கள்ளுக்கு விலையாகக் கொடுத்து; இல்அடுகள்-வீட்டில் உள்ள கள் வகைகளில்: இன் தோப்பி பருகி-இனிய, நெல்லால் செய்த கள்ளை உண்டு; மல்லல் மன்றத்து