பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7.ஆர் மகளிர் அறிவும் அன்பும்

மலைநாட்டு மறக்குடி மக்களின் வாழ்க்கை வளத்தை எடுத்துரைத்த பின்னர், பெரும்பாணன் அடுத்துப் புக விருக்கும் முல்லை நிலத்துஆய்ர் நலம்பற்றிக் கூறத் தொடங்

PITIf. - - * - .

ஒரு பால் மலை நிலமும், மறுபால் வயல் நிலமும் எல்லை யாய் அமைய அவற்றிற்கு இடைப்பட்ட நிலமே முல்லை ஆகும். அதனால், முல்லை நிலத்தில் வ்ாழ்பவர், ஆயர் எனும் ஒர் இனத்தவரே ஆயினும், அவ்வாயருள்ளும், மலை நிலத் தை ஒட்டிய பகுதியில் வாழ்வார் வாழ்க்கை முறை ஒருவகை யாகவும், வயல் நிலத்தை ஒட்டிய பகுதியில் வாழ்வார் வாழ்க்கை முறை வேறு வகையாகவும் அம்ைந்திருப்பது இயல்பே. அவ்விருவகைப்பட்ட வாழ்க்கை முறைகளையும் அறிந்து கொண்டாலல்லது ஆயர் வாழ்க்தை முறைகளை முழுமையாக அறிந்து கொண்டதாகாது; அதனால், அவ் விரண்டையும் விளக்க முனைந்து, மலை நிலத்தை ஒட்டி வாழும் ஆயர் வாழ்க்கை வளம் பற்றிய விளக்கத்தை முதற் கண் எடுத்துக் கொண்டார். • .

ஆயர்பாடியில் வரிசை வரிசையாகக் காணப்படும் சிறு சிறு குடில்களின் குறுகிய கம்பங்களில், ஆடு தின்னும் தழை கள், அவை நின்று தின்பதற்கான உயரத்தில் கட்டப் பட்டிருக்கும். கூரையாக வேயப்பட்ட ஒலையும் பிறவும் சரிந்து தொங்குவதால், குடிசைவாயில் சிறுதுாறுபோலும்