பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 89.

‘. மறிய

குளகு அரையாத்த குறுங்கால் குரம்பைச் செற்றை வாயில், செறிகழிக் கதவின் கற்றைவேய்ந்த கழித்தலைச் சாம்பின், அதளோன் துஞ்சும் காப்பின், உதள நெடும் தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றில் கொடுமுகத்து உருவையொடு வெள்ளை சேக்கும். இடுமுள் வேலி, எருப்படு வரைப்பின்,’ . நள் இருள் விடியல் புள் எழப் போகிப், புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி s ஆம்பி வான்முகை அன்ன கூம்புமுகிழ் உறையமை தீம்தயிர் கலக்கி, நுரை தெரிந்து புகர்வாய்க் குழிசி பூஞ் சுமட்டு இரிஇ நாள்மோர் மாறும் நன் மாமேனிச், - சிறுகுழை துயல்வரும் காதின், பணைத்தோள் குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள் அளைவிலை உணவிற் கிளையுடன் அருத்தி, நெய்விலைக்கட்டிப் பசும்பொன் கொள்ளாள் எருமை, நல்ஆன் கருநாகு பெறு உம் மடிவாய்க் கோவலர் குடிவயின் சேப்பின் இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப்பு அன்ன பசும்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்’.

- . . . . . . . . . (147 – 168)

(மறிய-ஆட்டு மறிகளுக்கு உரிய குளகு அரை யாத்த-தழைகள் இடையிலே கட்டப்பட்ட குறுங்கால்குறுகிய கால்களையும்; செற்றை வாயில்-சிறுதுாறு போலும் தோற்றம் தரும் வாயிலையும் செறிகழிக் கதவின்-ஒன்றின் குறுக்கே ஒன்றாகச் செறுக்கப்பட்ட கழிகளால் ஆகி, படல் எனும் பெயர்கொள்ளும் கத. வினையும் உடைய, குரம்பை-குடில்களையும்: கற்றை வேய்ந்த-வைக்கோல் கற்றை வேய்ப்பட்ட கழித்தலை