பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

கொண்டார். சிவப்பு நிறமுள்ள பூவிலிருந்து மகரந்தத்தூளை எடுத்து வெள்ளை நிறமுள்ள பூவிலே போட்டார். வெள்ளை நிறமுள்ள பூவிலுள்ளதைச் சிவப்புப் பூவில் தூவினார். வேறு பூக்களிலுள்ள மகரந்தம் இந்தப் பூக்களில் சேராதபடியும் கவனித்துக் கொண்டார். காய் காய்த்தது. அது முதிர்ந்து விதையும் கிடைத்தது. அந்த விதையை ஆவலோடு பாத்தியிலிட்டுத் தண்ணீர் ஊற்றினார். அப்படி முளைக்கவைத்த புதிய செடி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பருவமெய்தி அரும்பிப் பூத்தது. அதன் பூக்கள் முற்றும் சிவப்பாகவுமில்லை; வெள்ளையாகவுமில்லை. சிவப்பையும் வெள்ளையையும் கலந்தால் உண்டாகும் வெண்சிவப்பாக இருந்தன! துறவியார் தம் ஆராய்ச்சியை அதோடு நிறுத்திவிடவில்லை. வெண்சிவப்புப் பூக்களை ஒன்றோடொன்று சேருமாறு செய்தார். வேறு இனங்கள் அவற்றுடன் கலக்காதவாறு கவனித்துக் கொண்டார். மறுபடியும் புதிய விதைகள் கிடைத்தன. அவற்றைப் பயிரிட்டார். புதிய செடிகள் உண்டாகிப் பூத்தன. அவற்றின் பூக்கள் மேலும் விசித்திரமாக இருந்தன. சில முழுச் சிவப்பாயும், சில முழு வெள்ளையாயும், சில வெண் சிவப்பாயும் இருந்தன!

இம்மாதிரியாக எட்டு வருஷங்கள் ஆராய்ச்சி செய்ததின் பலனாக அவர் சில உண்மைகளைக் கண்டுபிடித்தார். பாரம்பரியத் தன்மைகள் ஒரு குறிப்பிட்ட