பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

இருக்கின்றன. ரப்பரில் மிக நுண்ணிய நூல் இழுத்து அதை நீளமாகவும் குட்டையாகவும் சிறு சிறு துண்டங்களாக வெட்டினால் எப்படி இருக்குமோ அவ்வாறு இந்த நிறக்கோல்கள் தோன்றுகின்றன.

ஒவ்வோர் உயிர்ப்பொருளின் அணுவிலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள நிறக்கோல்களே உண்டு. ஈயின் அணுவிலே 4 ஜோடியும். எலியின் அணுவிலே 20 ஜோடியும் இருக்கின்றன. சோளத்தின் அணுவிலே 10 ஜோடி: தக்காளியின் அணுவிலே 12 ஜோடி; மனித அணுவிலே 24 ஜோடி நிறக்கோல்கள் உண்டு.

மனித அணுவிலுள்ள இந்த நிறக்கோல்களை 24 ஜோடிகளாகப் பிரித்து வைத்தால் ஒவ்வொரு ஜோடியும் பார்வைக்கு ஒரே மாதிரி உருவமுடையதாக இருப்பது தெரியவரும். ஆண் அணுவில் ஒரு ஜோடி அணுக்கள் மட்டும் உருவத்தில் வித்தியாசமாக இருக்கும்.

மனிதவர்க்கத்தின் ஒவ்வோர் உயிரணுவிலும் 24 ஜோடி நிறக்கோல்கள் இருக்கின்றன என்று மேலே சொன்னேன். அதனால் கருவுண்டாவதற்குக் காரணமாகிய விந்தணுவிலும் கருமூலத்திலும் 24 ஜோடி நிறக்கோல்களே இருக்குமென்று நீங்கள் நினைப்பீர்கள், உண்மையில் அவ்வாறு இல்லை. அந்த அணுக்கள் முதிராத காலத்தில் 24 ஜோடி நிறக்கோல்களைத்-